பொது செய்தி

தமிழ்நாடு

பூச்சி தாக்காத கரும்பு நாற்று இளம் விவசாயி கண்டுபிடிப்பு

Added : ஏப் 18, 2016 | கருத்துகள் (4)
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கை அருகே சித்த மருத்துவமுறையில் பூச்சி தாக்காத கரும்பு நாற்றை இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார். கரனை மற்றும் நாற்று நடவு மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.கரும்பை கரையான், குருத்துபூச்சி போன்றவை தாக்குகின்றன.இதனை தடுக்க விவசாயிகள் குருனை மருந்தை பயன்படுத்தி கரனையை நடவு செய்கின்றனர்.மருந்தால் மண்ணில் உள்ள மண்புழு,நுண்ணுயிர் அழிந்து
 பூச்சி தாக்காத கரும்பு நாற்று இளம் விவசாயி கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே சித்த மருத்துவமுறையில் பூச்சி தாக்காத கரும்பு நாற்றை இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார்.

கரனை மற்றும் நாற்று நடவு மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.கரும்பை கரையான், குருத்துபூச்சி போன்றவை தாக்குகின்றன.இதனை தடுக்க விவசாயிகள் குருனை மருந்தை பயன்படுத்தி கரனையை நடவு செய்கின்றனர்.மருந்தால் மண்ணில் உள்ள மண்புழு,நுண்ணுயிர் அழிந்து போகின்றன. மண்ணும் சில ஆண்டுகளில் மலடாக மாறுகிறது. மேலும் மருந்து பயன்படுத்திய நிலத்தில் தொடர்ந்து நடந்து செல்லும் விவசாயிக்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் சித்த மருத்துவ முறையில் பூச்சி தாக்காத கரும்பு நாற்றை சிவகங்கை அருகே திருமலை விவசாயி அழகுசுந்தரம்,30, கண்டுபிடித்துள்ளார். அவர் கரும்பில் இருந்து விதைப்பருவை எடுத்து, அதில் துளையிட்டு வேப்பம்புண்ணாக்கு, பசுநெய் போன்வற்றை செலுத்துகிறார். பின் அவற்றை நாற்றாக வளர்த்து நடவு செய்கிறார். இதன்மூலம் கரையான் பாதிப்பு மட்டுமின்றி, குருத்துபூச்சி தாக்குதலும் இருக்காது. மேலும் கரும்பின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

அழகுசுந்தரம் கூறியதாவது: மண்புழுவை விட கரையான் மூலம் மண்ணிற்கும், தாவரத்திற்கும் 2 மடங்கு நன்மை கிடைக்கும். அவற்றை நாம் மருந்து மூலம் அழித்துவிடக் கூடாது. அவற்றை காக்கவும், கரும்புகளில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும் 3 ஆண்டு முயன்று புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன்.

எனது ஆராய்ச்சிக்கு திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர் பாலு உதவி செய்தார். ஏற்கனவே நான் கரும்பு விதை பெட்டி தயாரித்துள்ளேன். கோவை வேளாண் பல்கலையில் இளநிலை பண்ணை தொழில் நுட்பம் படித்துள்ளேன். தொடர்ந்து மற்ற பயிர்களுக்கும் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்,என்றார்.

பாராட்ட,95858 74197.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdul rahman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201615:11:06 IST Report Abuse
abdul rahman வாழ்த்துக்கள் சகோதரா.... அப்துல் ரஹ்மான்
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
18-ஏப்-201613:45:04 IST Report Abuse
Rameeparithi இனிக்கும் செய்தி... இயற்கையோடு வாழ பழகினால் எப்பவுமே இடரில்லை
Rate this:
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
18-ஏப்-201611:16:38 IST Report Abuse
kc.ravindran பூச்சி தாக்காத கரும்பு நாற்றை சிவகங்கை அருகே திருமலை விவசாயி அழகுசுந்தரம்,30, கண்டுபிடித்துள்ளார். "தோன்டிர் புகழோடு தோன்றுக" தமிழகம் பெருமை படுகிறது. இனிப்பு நிறைந்த செய்திகள் அவர் தம் பெற்றோர்களை மகிழ்விக்கும். வாழ்க வளமுடன். இந்த செய்தியை பற்றி இந்த தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் யாரேனும் புகழ்ந்து பேசுகிறார்களா என்று கவனியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X