சறுக்குகிறது அ.தி.மு.க., Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சறுக்குகிறது அ.தி.மு.க.

என்ன ஆயிற்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,க்கு? நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, மற்ற கட்சிகளுக்கு முந்தி, 4ம் தேதியே, 227 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயரை அறிவித்தவர், அடுத்த, 15 நாட்களுக்குள், ஏழு முறை வேட்பாளர்களை மாற்றி விட்டார்.

 சறுக்குகிறது ,அ.தி.மு.க.

'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என ஒதுக்கித் தள்ள முடியுமா இதை?
காரணம், பட்டியல் வெளியாவதற்கு முன் நடந்த நேர்காணலின்போது, விண்ணப்பித்தவர்களின் தெளிவின்மை கண்டு, தனக்கு திருப்தி இல்லை எனச் சொன்னவர், தானாகவே ஒரு பட்டியலைத் தயார் செய்து வெளியிட்டார்.
அவர் மனதுப்படி எல்லாம் நடந்திருந்தால், அந்தப் பட்டியலே, இறுதிப் பட்டியலாக இருந்திருக்க வேண்டும் அல்லவா! அப்படி இருக்கவில்லை. சராசரியாக இரண்டு நாளுக்கு ஒரு முறை என்ற வகையில், வேட்பாளர்களை மாற்றி அறிவித்த வகையில் உள்ளார்.
'என்ன தான் நடக்குது உள்ளே?' என விசாரித்தபோது, கட்சியினர் பல தகவல்களை முன்வைக்கின்றனர்.
* அ.தி.மு.க.,வுக்கு எதிராக களமிறங்கக் கூடிய கூட்டணிகள் உருவாகாத போது, உளவுத்

துறை கொடுத்த தகவல், ஆளுங்கட்சிக்கு மட்டும், 160 தொகுதி கிடைக்கும் என்பது. மற்ற கூட்டணிகளுக்கு பலம் ஏற ஏற, இங்கு சரிவு ஏற்படத் துவங்கியது.
* தன்னுடனான கூட்டணிக்காக வாசலில் காத்துக் கிடந்த மற்றும் தானே பேச்சு நடத்திய கட்சிகளுக்கு, தன்னுடைய வழக்கமான பாணியில் நிபந்தனைகள் விதித்து, அவை ஒத்து வராத நிலையில், அக்கட்சிகள் அனைத்தும்வெளியேறி, எதிரணிக்குச் சென்றபோது, தனக்கு லேசாக, 'ஜெர்க்' ஏற்படுவதை மெல்ல உணரத் துவங்கினார் ஜெ.,

* எதிர்க் கூட்டணிகள் பலம் பொருந்திய நிலையில் அமைந்து விட்டன; அக்கட்சியினரில் பலரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டனர். அவர்களின் பட்டியலைப் பார்த்ததும், அவர்களின் பலம் வாய்ந்த வேட்பாளர்களுக்கு எதிராக தன் கட்சிக்காரர் சிறப்பாக இல்லை என்பதை, மிகத் தாமதமாக உணர்ந்து, வேக வேகமாக மாற்றி வருகிறார் ஜெ.,
* இப்படி வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கையிலேயே, அவருக்கு லேசாக பொறி தட்டுகிறது. நேர்காணலின்போது வந்தவர்களில் பலர், தான் தயாரித்த பட்டியலில் இல்லாதவர்கள் என்றால், அதன் பிறகு வந்தவர்கள், பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டுமே? எதிராளி யார் எனத் தெரிந்து, அதற்கேற்றார் போல் பட்டியல் அமைய வேண்டுமே? எதிராளிகளின் பட்டியலை, கட்சி யினர், தனக்கு முன்கூட்டியே தராமல் போனது ஏன்?
இக்கேள்விகள் மனதில் எழுந்ததால், ஜெ., மேலும் ஆடிப் போனார்.
* அதோடு, இந்த முறை தேர்தல் பிரசாரத்திலும், ஜெ., சோபிக்கவில்லை. வழக்கம் போல, கதைகள் பல சொன்னாலும், பேச்சின் பாணி, கேட்பவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. பேச்சில் வீரியம், எழுச்சி இல்லாமல் போவது, அ.தி.மு.க.,வுக்கு

Advertisement

பின்னடைவை ஏற்படுத்துகிறது.
* எதிர் கூட்டணியில், பல தலைவர்கள், பல இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்கின்றனர். அவர்களின் பேச்சு, ஆக்ரோஷமாக உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சைக் கேட்பதே, 'காமெடி' தான் என, மக்களின் ரசனை, எதிரணியை நோக்கித் திரும்பி விட்டது.
இதற்கு நேர் மாறாக, ஆளுங்கட்சியின் தொலைக்காட்சியில், ஜெ.,யின் பிரசாரத்தை, புதுப் புதுத் தகவல்களாக வெளியிடாமல், கீறல் விழுந்த ரிக்கார்டு போல, காலை முதல் இரவு வரை, சில காட்சிகளை மட்டும், திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். இது, நெடுநாளைய
ஆதரவாளர்களைக் கூட, சலிப்படைய வைக்கிறது.- இவை தான், ஜெ.,யின் செல்வாக்கைக் கீழிறக்கும் காரணிகளாக அமைந்து விட்டன. இவற்றின் தாக்கம், சமீபத்திய உளவுத் துறையின் தகவல் வாயிலாகவும் தெரிகிறது.

அ.தி.மு.க., கூட்டணிக்கு, 85 முதல் 90 இடங்கள் தான் கிடைக்கும் என்பது தான் அத்தகவல்.


Advertisement

வாசகர் கருத்து (232)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Senthil Kumar - Coimbatore,இந்தியா
20-ஏப்-201600:49:44 IST Report Abuse

P Senthil Kumarஎன்ன செஞ்சுட்டா இந்த இரு கட்சிகளும். தமிழகம் கடனில். இவர் கோடியில் புரளுவதை தவிர. மீடியாக்கள் தயவுசெய்து சப்போர்ட் செய்தால் நல்ல மாற்றம் கொண்டு வரலாம்

Rate this:
lakshmanaraj - virudhai  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-201621:29:47 IST Report Abuse

lakshmanarajஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளைங்கிறது திமுகவுக்கு கன கச்சிதமா பொருந்தறது கண்ணுக்கு தெரியலையா, ஜெயாவைக் காட்டிலும் கருணா வேட்பாளர்களை துரிதகதியில் மாத்தி, தான் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட புளி என்று சொல்வது ஞாயமா. ஊருக்குதான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்கிறாரோ. திமுகவினரின் போராட்டத்தை பாக்கறப்போ வேட்பாளரை மாற்றுவதில் ஜெயாவை பின்னுக்கு தள்ளிவிடுவார் போல.

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
19-ஏப்-201621:11:56 IST Report Abuse

Sahayamகடைசியாக வந்த வாசனையும் இழந்து விட்டார். காமராஜர் ரெகார்ட் உடைக்கவேண்டும் என தலை கணம் தன்னையே அழித்து விட போகிறது .

Rate this:
மேலும் 229 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X