புதுடில்லி,:டில்லி ஆம் ஆத்மி அரசின் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டம், நேற்று தான் முழு அளவில் அமலானது.
விதியை மீறிய பா.ஜ., - எம்.பி., விஜய் கோயலுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.உலகளவில், மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில், டில்லியும் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம், அங்கு இயக்கப்படும், 90 லட்சம் வாகனங்கள் தான். காற்று மாசைக் கட்டுப்படுத்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கட்டுப்பாடு திட்டத்தை அறிவித்தது. தனியார் வாகனங்களின் பதிவெண்ணின் கடைசி எண், ஒற்றைப்படையாக இருந்தால், அது, ஒற்றைப் படை தேதியில் மட்டுமே இயக்க வேண்டும்; இரட்டைப் படை பதிவெண் கொண்ட வாகனங்கள், இரட்டை படை தேதியில்
இயக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விடுமுறைக்குப் பின்...
காலை,
8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை அமலில் இருக்கும் இந்த கட்டுப்பாடு
திட்டத்தின் முதல் கட்டம், 2016 ஜனவரியில், 15 நாட்கள் அமலில்இருந்தது.
இரண்டாம் கட்டம், ஏப்., 15ல் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், நேற்று, இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை நாடினர். சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
சிக்கிய எம்.பி.,
'இந்த கட்டுப்பாடு விதிகளை மீறுவேன்' என, ஏற்கனவே அறிவித்திருந்தார், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., விஜய் கோயல். டில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய், அவரது இல்லத்துக்குச் சென்று, விதிகளை மீறுவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் மீறி,நேற்று, அவர், இரட்டைப் படை தேதியான, 18ல், தன், ஒற்றைப் படை எண் உடைய வாகனத்தில் பார்லிமென்ட் நோக்கி பயணித்தார். அப்போது, ராய்சினா சாலையில் போலீசார் அவரைப் பிடித்து, 2,000 ரூபாய் அபராதம்
விதித்தனர். அதேபோல, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனத்துக்கான காப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததற்காக, 1,500 ரூபாயும் அபராதம் விதித்தனர்.
மந்திரி காரில் முதல்வர்
அரசின் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் வாகனத்தில், அலுவலகம் வந்தார்.
மெட்ரோ ரயில் கூடுதல் நடைகளுக்கு இயக்கப்பட்டன. விதிகளை அமல்படுத்தவும், மீறுபவர்களை பிடிக்கவும், 2,000 போக்குவரத்து போலீசாரும், 210 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த இரு நாட்களில், 2,300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (35)
Reply
Reply
Reply