காஞ்சிபுரம்: ''தமிழக மக்களே, தி.மு.க., ஆட்சியையும், என் ஆட்சியையும்
ஒப்பிட்டுப் பார்த்து, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்,'' என,
வாரணவாசியில் நடைபெற்ற, அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில்,
அ.தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசினார்.
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வாரணவாசியில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'குடும்ப ஆட்சியை
ஒழிக்க வேண்டும்; மக்களாட்சி மலர வேண்டும்' என, அ.தி.மு.க.,வை ஆட்சியில்
அமர்த்தினீர்கள். நான் ஆட்சி பொறுப்பில் வந்தவுடன், என்னென்ன
வாக்குறுதிகளை தந்தேனோ, அவைகளை நிறைவேற்றியுள்ளேன்.
நான் சொன்னதை செய்வேன்; சொல்லாததையும் செய்துள்ளேன். இந்த
சாதனைகளை பொறுக்க முடியாமல், கருணாநிதி மற்றும் தி.மு.க., வினர்,
90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நான் நிறைவேற்றவில்லை என, பொய் பிரசாரம்
செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என, தி.மு.க.,வினர் பொய்
பிரசாரம் செய்கின்றனர்; வாய்க்கு வந்ததை சொல்லி, மக்களை ஏமாற்றலாம் என,
நினைக்கின்றனர்.கடந்த, தி.மு.க., ஆட்சியை எண்ணிப் பார்த்தால், யார்
மக்களுக்காக உழைக்கின்றனர்;யார் தன் மக்களுக்காக உழைத்தனர் என்பது
தெரியும். முந்தைய ஆட்சியில், அரசு, 'கேபிள் டிவி' முடக்கப்பட்டதற்கு,
கருணாநிதி குடும்ப சண்டை தானே காரணம்!
தி.மு.க., பொய் பிரசாரம்
தமிழக மக்களுக்காக, கருணாநிதி செய்த பணிகள், இன படுகொலை,
கச்சத்தீவு தாரைவார்ப்பு, முல்லை பெரியாறு பிரச்னையில் தடுமாற்றத்துடன்
நடந்தது, நில அபகரிப்பு, திரைப்பட துறை கபளீகரம், தமிழகம் இருளில்
மூழ்கியது என, அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழக மக்களே, தி.மு.க., ஆட்சியையும், என் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.பெரு வௌ்ளத்தின் போது, என் அரசு செயல்பட்ட விதத்திற்கு,
மத்திய குழு நற்சான்று அளித்துள்ளது. ஆனால், தி.மு.க., பொய் பிரசாரம்
செய்து, ஆட்சியை பிடிக்கலாம் என பகல் கனவு காண்கிறது.
கருணாநிதிக்கு அருகதை கிடையாது.
மது விலக்கு பற்றி பேச, தி.மு.க., மற்றும்
கருணாநிதிக்கு அருகதை கிடையாது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மது விலக்குக்கு சட்டம்
இயற்றப்படும் என்றும், 'டாஸ்மாக்' விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்
எனவும் கூறப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு என்பது மறந்து விட்டதா? முதல்
கையெழுத்து ஏன் போட முன்வரவில்லை?
என் தலைமையிலான, அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன். பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.
டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்படும்; பார்கள் மூடப்படும்;
போதை மீட்பு நிலையம் அமைக்கப்படும்.
இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு,
பூரண மதுவிலக்கு என்பதை அடைவோம்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
வாரணவாசி கூட்டத்திற்கு, சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் வந்த ஜெயலலிதா, திரும்பிச் செல்லும் போது, சாலை வழியே சென்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (78)
Reply
Reply
Reply