பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் கொளுத்தும் வெயில் இலவச மோர் வழங்க அரசு முடிவு

Added : ஏப் 19, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement
விஜயவாடா: கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, இலவச மோர் வழங்க, ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இம்மாத துவக்கத்தில் இருந்தே, மாநிலம் முழுவதும் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், சாலைகளில் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு, மயக்கமடைவதுடன், உயிரிழக்கும்

விஜயவாடா: கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, இலவச மோர் வழங்க, ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இம்மாத துவக்கத்தில் இருந்தே, மாநிலம் முழுவதும் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், சாலைகளில் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு, மயக்கமடைவதுடன், உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில், வெயின் தாக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக, முதல்வர் சந்திரபாபு தலைமையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
பின், முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:கடும் வெயில் காரணமாக, மக்கள் உயிரிழப்பதை தடுக்க, அரசு சார்பில் இலவச மோர் மற்றும் உப்பு, சர்க்கரை கரைசல் பாக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்காக, 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirtha Rangarajan - chennai,இந்தியா
20-ஏப்-201612:42:16 IST Report Abuse
Amirtha Rangarajan கிரேட் சீப் மினிஸ்டர் சந்திரபாபு சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X