அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,-தி.மு.க., வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது: பிரேமலதா காட்டம்

Added : ஏப் 19, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை,: ''அ.தி.மு.க., அல்லது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது,'' என, மதுரையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசினார்.கட்சியின் வடக்கு தொகுதி வேட்பாளர் முஜிபுர்ரகுமான், மத்திய தொகுதி வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது:தமிழகத்தில் ஆட்சிகள் மாறுது. காட்சிகள் மாறுது. ஆனால் மக்களின் அவலம் மட்டும்
 அ.தி.மு.க.,-தி.மு.க., வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது: பிரேமலதா காட்டம்

மதுரை,: ''அ.தி.மு.க., அல்லது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது,'' என, மதுரையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசினார்.
கட்சியின் வடக்கு தொகுதி வேட்பாளர் முஜிபுர்ரகுமான், மத்திய தொகுதி வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சிகள் மாறுது. காட்சிகள் மாறுது. ஆனால் மக்களின் அவலம் மட்டும் மாறவில்லை. ஐந்தாண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லுார் ராஜூ மக்களுக்காக எதையும் செய்யாததால் செல்லாத ராஜூவாகி விட்டார். அவர் செல்லுமிடங்களில் மக்கள் விரட்டியடிக்கும் நிலையுள்ளது.
இத்தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் மேயராக இருந்த ராஜன்செல்லப்பா ஐந்தாண்டுகளாக எதையும் செய்யவில்லை. மாநகராட்சியில் ஊழல்கள் மட்டும் நடந்தன. மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த முகத்தை வைத்து அவர் போட்டியிடுகிறார்? இப்படி மோசமாக நிர்வாகம் செய்த அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சிகள் மீண்டும் வேண்டுமா?
தமிழகத்தில் இதுவரை அமையாத ஒரு கூட்டணியாக தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி அமைச்சரவை என விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க அமைந்த கூட்டணி இது. இலவசங்கள், ஓட்டுக்கு பணம் என அ.தி.மு.க., தி.மு.க., வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
தமிழகத்தில் 34 அரசு துறைகள் உள்ளன. எல்லா துறைகளும் ஊழல் மலிந்துள்ளது. பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. இக்கூட்டணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு துறையிலும் ஊழல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு நேர்மையான, வௌிப்படையான நிர்வாகம் கொண்டு வரப்படும், என பேசினார்.
துரோகத்திற்கு தண்டனைஆரப்பாளையத்தில் பிரேமலதா, ''இத்தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த சுந்தரராஜன், தொகுதி மக்களின் குறைகளை தெரிவிக்க முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க செல்கிறேன் என்று சென்றார். ஆனால் பெட்டியுடன் திரும்பி வந்தார். அவர் செய்த துரோகத்திற்கு, தண்டனையும் கிடைத்தது. தற்போது அவர் முகவரி
இல்லாமல் போய் விட்டார்,'' என்றார்.

மவுன புரட்சி

*பிரசாரம் துவக்கிய புதுாரில் நேற்று மாலை 4 மணிக்கு குறைவான தொண்டர்களே இருந்தனர். மாலை 6.15 மணிக்கு பிரேமலதா பேச துவங்கும் போது ஒரளவு கூட்டம் சேர்ந்தது.
*கூட்டத்தினர் அமைதியாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய பிரேமலதா, ''நீங்கள் அமைதியாக இருப்பதை பார்க்கும் போது மவுன புரட்சி என எடுத்து கொள்கிறேன். இந்த மவுன புரட்சி மக்கள் நலக்கூட்டணியை வெற்றி பெற வைக்கும்,'' என்றார்.
*தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரேமலதா கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை. ''முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்ததால் நேற்று பேசவில்லை. அடுத்தமுறை கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவார்,'' என,
தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SEETHARAMAN - chennai,இந்தியா
20-ஏப்-201607:37:04 IST Report Abuse
SEETHARAMAN முதலில் இந்த அம்மணி மேடைகளில் தனது கணவரைத் தூக்கி நிறுத்தட்டும் , பிறகு தமிழகத்தைத் தூக்கி நிறுத்துவது பற்றிப் பேசலாம் .
Rate this:
Cancel
Karuppaiah68 - Kovilpatti,இந்தியா
20-ஏப்-201602:35:07 IST Report Abuse
Karuppaiah68 ஆனால் நீங்க வந்தா யாரையுமே காப்பாத்த முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X