சென்னை, பாரிமுனை, தி.நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், கொடிகள் விற்பனை களைகட்டி உள்ளது.சட்டசபை தேர்தலையொட்டி, கட்சிக் கொடிகளின் விற்பனை களை கட்டத் துவங்கியுள்ளது.
அனைத்து கட்சிகளின் துணி, பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கொடிகள், 'பல்க்'காக ஆர்டர் , -
செய்வது, கடந்த சில நாட்களாக .அதிகரித்துள்ளது. குறிப்பாக, தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.கபா.ஜ., - பா.ம.க., அதிக தொகுதிகளில் போட்டி யிடுவதால், கட்சிக்கொடிகள் அதிகளவில் வாங்கப்படுகிறது.
கட்சித் தலைவர்களின் முக வடிவிலான, 'மாஸ்க்' கட்சி சின்னம் பொறித்த கைப்பிடி அட்டைகள், பேட்ஜ், மப்ளர் போன்றவையும் அதிகம் விற்பனை ஆகின்றன.இதுகுறித்து, சென்னை, பாரி முனையில் கட்சி - கொடிகளை விற்பனை செய்யும் வியாபாரி கள் கூறியதாவது:
பொதுவாக அதிகளவில்செவ்வக கொடிகள்தான் விற்பனையாகின்றன. அந்த வகை கொடிகள் விலை அதிகம்தான்.
அதனால், அந்த மாதிரி கொடிகள் தட்டுப்பாடில்லாமல் கிடைப்ப தற்காக, நிறைய அளவில் கொடிகளை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளோம். வழக்கமாக, கார்களின்
முகப்பில் கட்டும் கொடிகளுக்கு அதிக அளவில், கிராக்கி இருக்கும். ஆனால், இந்த முறை தேர்தல் கமிஷன் கெடுபிடியால், அந்த வகை கொடிகள் விற்பனை மந்தமாகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து