அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வீதிகளில் மது கடைகள் திறந்தவர் ஜெ.,
பிரசாரத்தில் ஸ்டாலின் பதிலடி

பெரம்பலுார்,:பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம், நேற்று நடந்தது.

வீதிகளில் மது கடைகள் திறந்தவர் ஜெ., பிரசாரத்தில் ஸ்டாலின் பதிலடி

பிதற்றுகிறார்: பெரம்பலூர் தொகுதி, சமூக சமத்துவ படை வேட்பாளர் சிவகாமி, குன்னம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் துரைராஜ், அரியலுார் தொகுதி வேட்பாளர் சிவசங்கர் ஆகியோரை ஆதரித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஆனால்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் போன்ற பகுதிகளை, ஜெயலலிதா பார்க்கவில்லை. ஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது.
அதனால், ஒழுங்காக பேசாமல் பிதற்றுகிறார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பிரச்னை குறித்து, தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், ஜெயலலிதா பயந்து போய் உள்ளார். இந்த ஏரி திறப்பு தாமதமானதால் ஏற்பட்ட சென்னை, திருவள்ளூர் மாவட்ட வெள்ளத்தில், 347 பேர் இறந்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு சவால் விடுகிறேன்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: விவகாரம் குறித்து, விசாரணை நடத்த தயாரா? மதுவிலக்கு பற்றி பேச, தி.மு.க.,வுக்கு அருகதை இல்லைஎன்கிறார். 1974ல் மதுக்கடைகள் மூடியபோது, அவற்றை திறந்தது அ.தி.மு.க., ஆட்சி தான். 2003ல், அரசே மது விற்கலாம் என கையெழுத்து போட்டவர், ஜெயலலிதா தான். ஒரே கையெழுத்து போட்டு, மதுக்கடைகளை மூடியவர், கருணாநிதி.
ஆனால், வீதி வீதியாக மதுக்கடைகளை

Advertisement

திறந்தவர், ஜெயலலிதா. 5 ஆண்டாகமதுக்கடைகளை மூட முடியாத ஜெயலலிதா, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார்.

பூரண மதுவிலக்கு: காஞ்சிபுரத்தில், ஜெயல லிதா பேசும்போது, தி.மு.க., பூரண மதுவிலக்கு என கூறவில்லை என்கிறார். மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே, பூரண மதுவிலக்கு தான். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஏப்-201611:19:04 IST Report Abuse

Parthasarathy Badrinarayananஉங்களை போல வசதியுள்ளவர் வீட்டில் குடிப்பீர்கள். மற்றவர்களுக்கு வீதியில்தானே திறக்கனும்

Rate this:
vikram - dindigul,இந்தியா
20-ஏப்-201618:22:27 IST Report Abuse

vikramகுடும்ப அரசியல் .ஊழல் - தி.மு.க

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201618:13:18 IST Report Abuse

மதுரை விருமாண்டிஇவரு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டு வீட்டுக்கு வீடு தொறக்க போறாங்க அம்ம்மா..

Rate this:
மேலும் 75 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X