'ரி' என்ற எழுத்தில் முடியும் சிவன் கோவில் அமைந்துள்ளதால், உளுந்துார்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
கடந்த, 2005ம் ஆண்டு, தே.மு.தி.க., கட்சியை துவக்கிய விஜயகாந்த், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டார். தமிழகத்தில் உள்ள, 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியை தனக்காக தேர்வு செய்தார். இங்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
விருதகிரி...இத்தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்ய காரணம், 'ரி' என்ற எழுத்தில் முடியும் சிவன்கோவில் உள்ள தொகுதி,
தனக்கு வெற்றியை தேடிதரும் என்ற, 'சென்டிமென்ட்'
தான் காரணமாகும். விருத்தாசலம் தொகுதி யில் உள்ள சிவன் கோவிலின் மூலவர்
பெயர், 'விருதகிரி' என்பதாகும்.
அர்த்தநாரி...இதன்தொடர்ச்சியாக, 2011 தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டார். இதற்கும் அவரது, 'ரி' சென்டிமென்ட் தான் காரணம். ரிஷிவந்தியத்தில் உள்ள சிவன் பெயர், 'அர்த்தநாரி' என்பது குறிப்பிடத்தக்கது.
'ரி' என்ற எழுத்தில் முடியும் சிவன் கோவில் உள்ள தொகுதியை தான் தேர்ந்தெடுத்து வருவதாக, மணலுார்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் விளக்கம் தெரிவித்தார். விஜயகாந்தின் சென்டிமென்ட் பொய்க்காமல், 'ஜாக்பாட்' அடித்தது. தே.மு.தி.க.,
29 தொகுதி களில் வெற்றி பெற்றதோடு, எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த்
தேர்வு செய்யப்பட்டார்.
இது போன்ற சூழ்நிலையில், நடக்கவுள்ள தேர்தலிலும், 'ரி' சென்டிமென்ட் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்,
உளுந்துார்பேட்டை தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்துள்ளார்.
கிராம அர்த்தநாரி...: இந்த தொகுதியில் உள்ள எலவனாசூர்கோட்டை என்ற கிராமத்தில், 'கிராம அர்த்தநாரி' என்ற பெயருடன், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையும் விஜயகாந்தின், 'ரி' சென்டி மென்ட் கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெரிந்துவிடும்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (39)
Reply
Reply
Reply