கரூர், : அ.தி.மு.க.,வில் தொடர்ந்து வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்படுவதால், பணம் செலவு செய்ய, அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தயங்குகின்றனர்.
தேர்தலில் போட்டியிட, 227 தொகுதிகளுக்கு, அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வேட்பாளர்கள் மீது, கட்சியினரிடம் இருந்து புகார் சென்றதாலும், எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்கொள்ளும்பொருட்டும், அ.தி.மு.க.,வில் வேட்பாளர்களை மாற்றம் செய்து வருகிறார், ஜெயலலிதா.
இதனால், பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், அக்கட்சி வேட்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'எங்கே மாற்றி விடுவரோ' என்ற பயத்தில், பணம் செலவு செய்யதயங்குகின்றனர்.
பல வேட்பாளர்கள், ரொம்ப சாமர்த்தியமாக, கொளுத்தும்
கோடை வெயிலை காரணம் காட்டி, பிரசாரத்தை தள்ளி வைக்கின்றனர்.
தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமுதாய
தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பதோடு நிறுத்தி கொள்கின்றனர். செலவு இல்லாத பிரசாரத்தையே, அ.தி.மு.க., வேட்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (20)
Reply
Reply
Reply