மும்பை:'வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு, கடந்த ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து, சாதனை அளவாக, ஒரு கோடி டாலர் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது' என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு, இத்தொகை அனுப்பப்பட்டுள்ளது. இந்தியர்கள், 'எல்.ஆர்.எஸ்.,' என்ற திட்டத்தின் கீழ், ஒரு
நிதியாண்டில், அதிகபட்சமாக, 2.50 லட்சம் டாலர் வரை, வெளிநாடுகளுக்கு பணம்
அனுப்பலாம். இத்தொகைக்குள், வெளிநாட்டு கல்வி, சுற்றுலா, மருத்துவம்
போன்றவற்றுக்குசெலவிடவும், வங்கியில் சேமிக்கவும், பங்குகள், கடன் பத்திரங்கள், சொத்துகள் ஆகியவற்றை வாங்கவும் அனுமதி உண்டு.
இந்த வசதியின் கீழ், 2015 - 16ம் நிதியாண்டில், ஏப்., - பிப்., வரையிலான, 11 மாதங்களில்,
இந்தியர்கள், வெளிநாடுகளுக்கு, 381 கோடி டாலர் அனுப்பியுள்ளனர்; இது, முந்தைய முழு நிதியாண்டில் அனுப்பிய, 132 கோடி டாலரை விட, 187 சதவீதம்அதிகம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டு நிலவரப்படி, இந்தியர்கள், வெளிநாடுகளுக்கு, மாதம், சராசரியாக, 40 கோடி டாலர் அனுப்பியுள்ளனர். முழு நிதியாண்டில், இந்தியர்கள் அனுப்பிய தொகை, 400 கோடி டாலர்
அல்லது, 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா: இந்தியாவில் இருந்து, ஆண்டு தோறும்,3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலச் செல்கின்றனர். இதில், பெரும்பான்மை யானோர், அமெரிக்காவில் பயில் கின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (7)
Reply
Reply
Reply