பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'உதய்' திட்டம், தமிழகம் இழப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'உதய்' திட்டத்தில் தமிழக அரசு சேராததால் தமிழ்நாடு மின் வாரியம் கேட்ட 6,000 கோடி ரூபாய் கடனை வழங்க, மத்திய அரசின் 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்கள் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

'உதய்' திட்டம், தமிழகம் இழப்பு

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின் கட்டணம், அரசு மானியம் போன்றவற்றின் மூலம் வருவாய் கிடைக்கிறது. இது ஊழியர்கள் சம்பளம், எரிபொருள் உள்ளிட்டவற்றிற்கு செலவு செய்யப் படுகிறது. மின் நிலையம், மின் வழித்தடம் அமைப்பதற்கான நிதி கிடைக்காமல் மாநில மின் வாரியங்கள் சிரமப்பட்டு வந்தன.

மத்திய அரசு உதவி: தற்போது வருவாயை விட செலவு அதிகம் உள்ளதால் அதை சமாளிக்க வங்கிகள் மற்றும் மத்திய அரசு நிதி நிறுவனங்களிடம் இருந்து தமிழக மின் வாரியம் கடன் வாங்குகிறது.

இதை தவிர்க்க மத்திய அரசு, 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' ஆகிய நிறுவனங்கள் மூலம் மின் வாரியத்திற்கு கடன் வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மின்

வாரியம் 2015 - 16 ஆண்டின் வருவாய் இழப்பை சமாளிக்க, மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம் 3,000 கோடி ரூபாய் கடன் கோரியது.

'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனத்திடமும் 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டு மின் வாரியம் விண்ணப்பித்தது. ஆனால் அந்த நிறுவனங்கள், கடனை வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியம், கடந்த நிதியாண்டின் வருவாய் இழப்பை சமாளிக்க, பவர் பைனான்ஸ் நிறுவனத்திடம், 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டது. இதற்கான அனைத்து விவரங்களும், அந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. 3,000 கோடி ரூபாயை நீண்ட கால கடனாக வழங்க, பவர் பைனான்ஸ் நிறுவனம், 2015 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.கடனை பெற்ற பின், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, மின் வாரியம் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அதன்பின், ஏழு ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

நிராகரிப்பு:
ஆனால், கடன் வழங்க ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்த, 'பவர் பைனான்ஸ்' நிறுவனம், தற்போது மறுத்துவிட்டது.'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனத்திடம், 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம், அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்த போது நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்த நிறுவனங்கள் கடன் வழங்காததற்கு, தமிழ்நாடு மின் வாரியம்,

Advertisement

மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில் சேராததே காரணம் என தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முற்றிலும் கோணல்; முழிபிதுங்கும் மின் வாரியம்!: மத்திய அரசு, 'உதய்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மின் வாரியம், மூலதன செலவிற்கு வாங்கிய கடன், 38 ஆயிரத்து, 250 கோடி ரூபாய்; வருவாய் செலவிற்கான கடன், 43 ஆயிரத்து, 540 கோடி ரூபாய் என, 81 ஆயிரத்து, 790 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது.

ஏற்கனவே, மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் மின் வாரிய கடனில், 17 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை மட்டும் ஏற்று கொள்ள, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு, 25 சதவீத மானியம் கேட்டதுடன், மின் கட்டணத்தை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நிபந்தனையை தளர்த்துமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்காததால், தமிழக அரசு, 'உதய்' திட்டத்தில் இணையவில்லை என தெரிகிறது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201621:33:15 IST Report Abuse

Pugazh Vஇதில் புரியாத விஷயம், என்னத்துக்காக கலைஞரையும் திமுக வையும் சேர்த்து திட்டி எழுதுகிறார்கள்? அதிமுக வை மட்டுமே கண்டிக்க பயம்? தயக்கம்? அல்லது மைண்ட் செட் அப்படி ஆகிவிட்டது? மெண்டல் ப்ளாக் என்பது இது தான். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட உதய திட்டத்தை அமல் படுத்திவிட்டார்கள். கேரளாவைக் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் போதும்.

Rate this:
20-ஏப்-201616:49:19 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் . அது மக்களுக்கு போய் சேர்வதில் எங்களுக்கு என்ன லாபம். நாங்களே டெண்டர் விட்டு கொள்ளை லாபம் பார்ப்போம். மூன்று மாதத்தில் கட்டணத்தை மாற்றி அமைக்க வழி இருக்கிறதே தவிர அது கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என்பது கிடையாது. குறைக்கலாம் அல்லது அதே கட்டணத்தில் தொடரலாம். பல மாநிலங்கள் ஏற்று கொண்ட நிலையில் இந்த அடிமை கூட்டம் அறிவாளிகள் போன்று உளறிக்கொண்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒருபுறம் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டு மறுபுறம் கடனையும் ஏற்றி கேவலமான நிர்வாகம்.

Rate this:
Anantha Narayanan - Chennai,இந்தியா
20-ஏப்-201615:50:53 IST Report Abuse

Anantha Narayananஇங்கு எல்லோரும் மின்சாரம் இலவசமாகவே வேண்டும் என்ற கருத்தில் இருக்கின்றனர். இவர்கள் தொழில் செய்தால் இலவசமாக தருவார்களா?

Rate this:
மேலும் 95 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X