அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நமது வெற்றி ஜெ.,க்கு புரிந்து விட்டது:
கருணாநிதி நம்பிக்கை

சென்னை, : 'நாம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்பதை ஜெயலலிதாவே புரிந்து கொண்டு விட்டார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 நமது வெற்றி ஜெ.,க்கு புரிந்து விட்டது: கருணாநிதி நம்பிக்கை

அவரது அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, தன் பிரசாரத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம்

இயற்றப்படும் என்று தான் உள்ளது.

ஏன் பூரண மதுவிலக்கு என, குறிப்பிடவில்லை. முதல் கையெழுத்து போடப்படும் என்று ஏன் வாக்குறுதிஅளிக்கவில்லை என பேசியுள்ளார்.

தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும், மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால், வருவாய் இழப்பை ஈடு செய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, தெளிவாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

ஆனால்,படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரப்போகிறேன் என, தேர்தலுக்காக பேசியிருக்கும் ஜெயலலிதா, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது என்று, இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி, தேர்தல் பிரசாரக்

Advertisement

கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

எப்படியோ, நாம் தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்பதை ஜெயலலிதாவே புரிந்து கொண்டு விட்டார் என்பது நன்றாகவே புரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
01-மே-201601:30:02 IST Report Abuse

Cheenu Meenuநமது வெற்றி ஜெ.,க்கு புரிந்து விட்டது: கருணாநிதி நம்பிக்கை. இனி தமிழ்நாட்டின் கதி அதோ கதி தான்.

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
30-ஏப்-201607:52:00 IST Report Abuse

மு. தணிகாசலம் வெற்றி பெற்றால் அண்ணா வழி, தோல்வி அடைந்தால் பெரியார் வழி என்றெல்லாம் வசனம் பேசுவீர்களே தாத்தா? 2016 தேர்தலில் ஒரு வேளை தோற்றால் பெரியார் வழிதானே? ஆமாம் ஆமாம் அதனால் தான் தி.மு.க. ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல ஒர் இயக்கம் என்று சமீபத்தில் வசனம் பேசியுள்ளீர்களே....

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
01-மே-201605:57:08 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஏம்பா.. ஜெயா பாட்டி மாதிரி ஜெயிச்சா தூக்கம்... தோத்தா பெருந்தூக்கம் எல்லாம் எங்க தலைவருக்கு வராது. அது ஓய்வறியா உதய சூரியன். ...

Rate this:
mnathumitha - CA,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201600:43:08 IST Report Abuse

mnathumitha அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாதான் கட்டுமர கனவை என்னவென்று சொல்வது மக்கள் தங்கள் நிலம், மனை, வீடுகளை பறிகொடுக்க தயாராகிவிட்டார்கள் என்கிறார் கட்டுமரம் மக்கள் ரவுடி ராஜ்யத்தை விரும்புகிறார்கள் என்கிறார் கட்டுமரம் மக்கள் கொள்ளை கூட்டத்தை ஆதரிப்பார்கள் என்கிறார் கட்டுமரம் மக்கள் அந்த அளவிற்கு முட்டாள்கள் என்றால் 2014 ல் கட்டுமரம் கட்சி ஒரு இடமாவது பெற்றிருக்கும் எனக்கென்னவோ 2016 தேர்தலோடு கொள்ளை கூட்ட திருட்டு முன்னேற்ற கழகம் அழியும் என்றே தோன்றுகிறது

Rate this:
மேலும் 142 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X