அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தி.மு.க.,வில் குண்டர்கள் தான் இருக்கின்றனர்'
சேலம் பிரசாரத்தில் ஜெயலலிதா ஆவேசம்

சேலம்: ''அ.தி.மு.க., தொண்டர்கள் நிறைந்த கட்சி. ஆனால், தி.மு.க.,வில் குண்டர்கள் தான் இருக்கின்றனர். இதை கருணாநிதியே ஒப்புக் கொண்டுள்ளார்,'' என, சேலத்தில் நடந்த, அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

'தி.மு.க.,வில் குண்டர்கள் தான் இருக்கின்றனர்'சேலம் பிரசாரத்தில் ஜெயலலிதா ஆவேசம்

சேலம், மகுடஞ்சாவடி அருகில் உள்ள கூத்தாடிபாளையத்தில், அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. இதில், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மற்றும் கேரள சட்டசபை வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

பெண்களின் நிலையை மேம்படுத்த, 1994ல், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினேன். இதை, 1996ல், தாம் செய்ததாக கருணாநிதி கூசாமல் பொய் கூறுகிறார். தற்போது, 50 சதவீதமாக உயர்த்தி, சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, வரும் உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்படும்.

கடந்த தி.மு.க., ஆட்சி காட்டாட்சியாகவும்,

இருண்ட காலமாகவும் இருந்தது. வெளியில்சென்ற ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வீடு திரும்புவரா என, அச்சப்படும் அளவுக்கு, கொலை, கடத்தல், நில அபகரிப்புகள் நடந்தன.சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, போலீஸ் கடமை. ஆனால், சமூக விரோதிகளின் நண்பர்களாக,தி.மு.க.,வினர் இருந்ததால், அவர்களை கண்டு அஞ்சும் நிலையில், போலீஸ் இருந்து வந்தது.

அ.தி.மு.க., தொண்டர்கள் நிறைந்த கட்சி. ஆனால், தி.மு.க.,வில் குண்டர்கள் இருக்கின்றனர். இதை கருணாநிதியே, 2012ம் ஆண்டில் நடந்த, தி.மு.க., பொதுக்குழுவில், 'கட்சிக்குள் சில குண்டர்கள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்' என, கூறியுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில், சாதாரண தொண்டன் முதல், ஆட்சியாளர்கள் வரை, போலீஸ் பணியில் குறுக்கீடு செய்து வந்தனர்.

இதை மாற்றி சட்டத்தை நிலை நிறுத்தியது நான் தான். இன்று யாரும் குறுக்கீடு செய்ய முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு வந்த இருவர் பலி:மகுடஞ்சாவடி அருகே உள்ள குப்பாண்டனுாரை சேர்ந்தவர் பச்சியண்ணன், 55. மகுடஞ்சாவடியில்இருந்து கூட்டம் நடந்த கூத்தாடிபாளையத்துக்கு இடையிலான பாலத்தின் மீது மதியம், 2.25 மணிக்கு நடந்து வந்தார். வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீர் என மயங்கி பாலத்தின் சரிவு பகுதியில் விழுந்தார். அவரை மீட்ட போலீசார், மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு

Advertisement

அனுப்பி வைத்தனர். அவரை சோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்ததை உறுதி செய்தனர்.

சேலம் மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள ராமநாதன்புதுாரை சேர்ந்தவர் பெரியசாமி, 65. இவர் நேற்று ஜெயலலிதா கலந்து கொண்ட பிரசார கூட்டத்துக்கு லாரியில் வந்துள்ளார். கூட்டம் முடிந்த நிலையில், மீண்டும் ஊர் செல்வதற்கு, லாரி அருகே சென்று தண்ணீர் குடித்தவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை லாரியில் ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால், மகுடஞ்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கவே, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

லாரி, சங்ககிரி கூட்டு ரோடு அருகே சென்றபோது, அவர் இறந்தார்.
இதேபோல, கூட்டத்திற்கு வந்த 2 பெண்களின் கைகள், நெரிசலில் சிக்கி முறிந்தன.

Advertisement

வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஏப்-201603:51:37 IST Report Abuse

meenakshisundaramநாங்க குண்டர்களை கட்சியை விட்டு முன்பே நீக்கிட்டோமே. வேணுன்னா Madurai பக்கம் வந்து செக் பண்ணிக்கோங்கோ

Rate this:
Thangaraj_Cs - coimbatore,இந்தியா
21-ஏப்-201622:21:42 IST Report Abuse

Thangaraj_Csதி.மு.க.,வில் குண்டர்கள் தான் இருக்கின்றனர் என்றால் அ தி மு க வில் அடிமைகள் மட்டுமே உள்ளனர் என ஏன் கூறவில்லை ...

Rate this:
Velmurugan - MADURAI  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201622:11:20 IST Report Abuse

Velmuruganஅதிமுகவில் தண்டங்கள் இருக்கிறார்கள்

Rate this:
KANAGARAJ - TRICHY,இந்தியா
25-ஏப்-201614:21:53 IST Report Abuse

KANAGARAJஎல்லாம் கூன் பாண்டியர்கள். ...

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X