சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், நேற்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சந்தித்து பேசினார்.
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், நடிகை குஷ்பு மயிலாப்பூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று மாலை நடிகை குஷ்பு சந்தித்து பேசியது, திடீர் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் வேட்பாளர்கள் ராயபுரம் மனோ, ஏ.ஜி.சிதம்பரம், ஹசன் ஹாரூன், மலேசியா பாண்டியன், வசந்த குமார் ஆகியோர், நேற்று கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த குஷ்பு கூறுகையில், ''மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன். கருணாநிதி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முன், அவரை சந்தித்து பேச விரும்பினோம்; பேசிவிட்டோம். சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE