சேலம்,: சேலத்தில், நேற்று தே.மு.தி.க., கூட்டத்துக்கு வந்த பத்திரிகையாளர்களை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது. காரில் வந்தார்சேலத்தில், நேற்று தே.மு.தி.க., வேட்பாளர்கள் கூட்டம் நடந்த, கே.எம்.பி., திருமண மண்டபத்துக்கு, காலை, 11:35 மணிக்கு விஜயகாந்த் காரில் வந்து இறங்கினார்.
மண்டபத்தின் நுழைவாயிலில் காத்திருந்த, 'டிவி' பத்திரிகையாளர்கள், 'மைக்'கை நீட்டியபடி, 'திடீர் கூட்டத்துக்கான காரணம் என்ன?' என, கேள்வி எழுப்பினர். பதில் அளிக்காமல் சென்ற விஜயகாந்திடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த அவர், 'டிவி' சேனல் நிருபர் ஒருவர் உட்பட சிலரை, அவரது பாணியில், நாக்கை துருத்தி, கையை ஓங்கி அடிக்க முயன்றார். பின், சுதாரித்துக் கொண்ட அவர், விலகி செல்லும்படி சைகை செய்து வேகமாக மண்டபத்துக்குள் சென்றார்.
பாதுகாவலர்அப்போது அவரது பின்னால், அவரை அணைத்தபடி சென்ற பாதுகாவலர் ஒருவரை, முழங்கையை வைத்து பின்புறமாக இடித்து தள்ளினார். அதன்பின் கைத்தாங்கலாக விஜயகாந்த், மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஏற்கனவே, சென்னையில் கேள்வி எழுப்பிய நிருபர்களை பார்த்து, 'துா' என விஜயகாந்த் துப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE