அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் தே.மு.தி.க., வேட்பாளர் மாற்றம்

Added : ஏப் 21, 2016
Share
Advertisement
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, ஏகாம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.இத்தொகுதி வேட்பாளராக சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டதை, கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் அனகை முருகேசன் விரும்பவில்லை. அவரது ஆதரவாளரான ஏகாம்பரத்தை நிறுத்த வேண்டும் என, அவர் மேலிடத்தில் வலியுறுத்தினார். இதனால்,

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, ஏகாம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.இத்தொகுதி வேட்பாளராக சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டதை, கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் அனகை முருகேசன் விரும்பவில்லை. அவரது ஆதரவாளரான ஏகாம்பரத்தை நிறுத்த வேண்டும் என, அவர் மேலிடத்தில்
வலியுறுத்தினார். இதனால், சண்முகசுந்தரத்தை மாற்றி விட்டு, ஏகாம்பரம் போட்டியிடுவார் என, கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சண்முகசுந்தரம் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து, அதற்கான பணம் கட்டினேன்; எனக்கு கட்சி மேலிடம், 'சீட்' வழங்கியது. இது, மாவட்ட செயலர் அனகை முருகேசனுக்கு பிடிக்கவில்லை.
என்னை மாற்றினால் தான், வேட்பு மனு தாக்கல் செய்வேன் என, அவர் மேலிடத்தில் கூறியதால், நான் மாற்றப்பட்டேன். போட்டியிடாவிட்டாலும், தொடர்ந்து
கட்சியில் செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X