பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

Updated : ஏப் 21, 2016 | Added : ஏப் 21, 2016 | கருத்துகள் (6)
Share
Advertisement
காரைக்குடி,:சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.காரைக்குடி அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை தலைவர் சேகர்
 ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

காரைக்குடி,:சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை தலைவர் சேகர் கூறியதாவது:

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு, நான்கு முறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த பரிசோதனை செலவுகளை குறைக்கும் வகையில், குறைந்த செலவில் மின்னணு கருவிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், 30 லட்ச ரூபாய் செலவில் மேற்கொண்டு வந்தோம்.

அதன்படி, குளுக்கோ மீட்டர் உணர் கருவிகள், ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம். சர்க்கரை நோயாளிகளுக்கு, ஊசி மூலம் ரத்தம் எடுக்கப்பட்டு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. மூச்சு காற்று மூலமாக சர்க்கரை நோயின் அளவை கண்டறிவதற்கான அடுத்த கட்ட ஆராய்ச்சியில் எங்கள் துறை ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய, குறைந்தபட்சம், 25 முதல் 30 ரூபாய் வரை செலவாகிறது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
21-ஏப்-201615:28:07 IST Report Abuse
Ramaswamy Sundaram வாழ்த்துக்கள்....மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மிகவும் நல்லது
Rate this:
Cancel
Yuvi - Karur,இந்தியா
21-ஏப்-201609:33:22 IST Report Abuse
Yuvi வழிகாட்டிய பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். இது போல நிறைய ஆராய்ச்சிகள் நமது நாட்டில் காப்புரிமை பெறாமலே வீணடிக்க படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகம் எல்லாரும் campus placement, வேலை வாய்ப்புக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீடியாக்கள் இது போல கல்லூரிகளில் project exhibition நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
Rate this:
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-ஏப்-201607:30:33 IST Report Abuse
Agni Shiva அருமையானதும் மிகுந்த ஆக்கபூர்வமானதுமான கண்டுபிடிப்பு. விரைவிலேயே இதை பொதுமக்களுக்காக தயாரித்து அளிக்கப்படவேண்டும். இதன் மூலம் கொள்ளை அடிக்கும் வெளிநாட்டு கம்பெனிகளின் கொட்டம் அடங்கும்.
Rate this:
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
21-ஏப்-201619:53:02 IST Report Abuse
ஆ.தவமணி,   சரியாகச் சொன்னீர்கள் Mr Agni Shiva ..என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ? ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் ? ... ஆனால், இதனை அங்கீகாரம் செய்யும் அதிகாரத்தில் தற்போதுள்ள நம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் மனநிலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X