அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 ஜெ.,வை எதிர்க்க எல்லா கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள்... வியூகம்!:* ஆர்.கே.நகரில் சிம்லா, ஆக்னஸ், வசந்திதேவி போட்டி

முதல்வர் ஜெயலலிதாவை தோற்கடிக்க, புதிய வியூகம் அமைத்துள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும், அவர் போட்டியிடும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளன. தி.மு.க., சார்பில் சிம்லா, பா.ம.க., சார்பில் ஆக்னஸ், தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சார்பில், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 ஜெ.,வை எதிர்க்க எல்லா கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள்... வியூகம்!:* ஆர்.கே.நகரில் சிம்லா, ஆக்னஸ், வசந்திதேவி போட்டி

முதல் முறையாக, இந்த தேர்தலில், 227 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.
அதனால், தன் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, அவர் போட்டியிடும், ஆர்.கே.நகர் தொகுதியில், பெண் வேட்பாளர்களை களமிறக்கும் முடிவை, முக்கிய எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன.

தி.மு.க., தோல்வி:ஜெயலலிதா, முதன்முதலாக, 1989ல், போடிநாயக்கனுார் தொகுதியில், களம் இறங்கினார். இத்தேர்தலில்,

தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, முத்து மனோகரனை தோற்கடித்தார்.

அடுத்து, 1991ல், பர்கூர் மற்றும் காங்கேயத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ல், பர்கூரில் போட்டியிட்ட அவர், தி.மு.க., வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார். அடுத்து, 2002, 2006 சட்டசபை தேர்தலில், ஆண்டிபட்டியில் இருந்துதேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியிலும், 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். இவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும், எதிர்க்கட்சியான, தி.மு.க., ஆண் வேட்பாளர்களையே களம் இறக்கியது. இம்முறை ஜெயலலிதாவை எதிர்த்து,

காங்கிரஸ் சார்பில் குஷ்புவை களம் இறக்க, காங்கிரஸ் விரும்பியது. ஆனால், தொகுதியை விட்டுத் தர, தி.மு.க., முன்வரவில்லை. எனவே, வழக்கறிஞர் சிம்லா என்ற பெண் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.அதைத் தொடர்ந்து, தனித்து போட்டியிடும், பா.ம.க.,வும், ஆக்னஸ் என்ற பெண் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.

மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள, தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் களம்

Advertisement

இறங்கக்கூடும் என தகவல் பரவியது. இறுதியாக அந்தக் கூட்டணியினரும், ஜெயலலிதாவை எதிர்த்து, பெண் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து, கல்வியாளர் வசந்தி தேவியை களம் இறக்கி உள்ளனர். அதுவும், அக்கூட்டணியின் பொது வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கடும் நெருக்கடி:ஜெயலலிதாவை எதிர்த்து, ஆண் வேட்பாளர்களை களம் இறக்குவதால், பெண்கள் ஓட்டு கணிசமான அளவுக்கு, ஜெயலலிதாவுக்கு கிடைத்து விடுகிறது. இதை தடுக்கவே, இம்முறை முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும், பெண் வேட்பாளரை களம் இறக்கி உள்ளன. இதனால், ஆர்.கே.நகரில், ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை எதிர்த்து, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடும்போது, ஜெயலலிதா தன் பிரசார பயணத்தை ஒத்திவைத்து, ஆர்.கே.நகரில் அதிக நாட்கள் முகாமிட வேண்டிய நிலைமை வரும் என்றும், இக்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்படி வியூகம் வகுத்துள்ள நிலையில், தமிழக பா.ஜ., மட்டும் ஆண் வேட்பாளரை, இத்தொகுதியில் களம் இறக்கி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghu - sivakasi,இந்தியா
22-ஏப்-201606:33:52 IST Report Abuse

Raghuஇதுக்கு பேர் வியுகம் இல்ல ,ஜெயா வெற்றிக்காக விட்டுகொடுத்தல்

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
21-ஏப்-201621:26:01 IST Report Abuse

Sivagiriஅடடா . . . ஒரு பெண் ஒரே பெண் அவருக்கு முன்னாள் எத்தனை எத்தனை படைகள் வியூகங்கள் - ஆஹா ஆஹா . . . அத்தனையும் சூறாவளியில் சிக்கிய சருகுகள் போல காணாமல் போகும் . . .

Rate this:
EPADMANABHAN - chennai,இந்தியா
21-ஏப்-201621:01:19 IST Report Abuse

EPADMANABHANஇரண்டு திராவிட கட்சிகளும் அதன் கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே உண்மை. அதனாலேயே ஆர்கே நகர் தொகுதியில் ஜெ வை எதிர்த்து பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறினேன். அதேபோல திருவாரூர் தொகுதியிலும் ஒரு பொது வேட்பாளரை - கடுமையான போட்டியாளரை - நிறுத்தி மு க வையும் தோற்கடிக்க வேண்டும்.. ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தோற்கடிக்க பட வேண்டும். புதியதான நாட்டை ஆளும் கட்சி - பிஜேபி யை கொண்டு வருவோம் வாழ்க பாரதம், வளர்க அனைத்து மக்கள் ஒற்றுமை.

Rate this:
மேலும் 137 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X