அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சப்பாணி கட்சியா தமிழக பா.ஜ.?

சரியாகத்தான் சொல்கிறார், நாஞ்சில் சம்பத். 'தமிழகத்தில் கால் ஊன்ற போகின்றனராம்; கால் இருந்தால் தானே ஊன்ற முடியும்; கால் இல்லாத சப்பாணி அமைச்சர்களால் என்ன செய்ய முடியும்' என்ற அவரின் பேச்சு, அ.தி.மு.க., நாளிதழில் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது.

சப்பாணி கட்சியா தமிழக பா.ஜ.?

அவர் சப்பாணி அமைச்சர்கள் என விளித்திருப்பது, நம்ம ஊரு பொன்னாரை மட்டுமல்ல; தமிழக பா.ஜ.,வை கரையேற்ற, மேலிடம் அனுப்பிய பியுஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரையும் தான்.

தனித்து நிற்கும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு தைரியம் தந்தது, 2014 லோக்சபா தேர்தல். 19.5 சதவீதம் ஓட்டுகளை பெற்றதால், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு ஒரே மாற்று, பா.ஜ., மட்டுமே என பேசத் துவங்கினர்.

தேர்தல் நெருங்க நெருங்க, அவர்களது சுருதி குறைந்தபடி இருக்கிறது. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு கிடைத்த ஓட்டுகள், மோடிக்கு கிடைத்தவை. அவரால், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளும் பலன் அடைந்தன என்பதே உண்மை.

அதை தாமதமாக உணர்ந்த தமிழிசை போன்ற தலைவர்கள், இந்த தேர்தலில், மோடி முகமூடி, எந்த கடையிலும் கிடைக்காது என்பதால், கூட்டணி முகமூடியை தேடினர். தமிழிசைக்கு முன்பாகவே, இதை உணர்ந்து கொண்ட பழைய பார்ட்னர்களான, ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க.,கட்சிகள், ஒவ்வொன்றாக கிளம்பி விட்டன.


இப்போது, ரிக்கார்டை மாற்றி போட்டு, கச்சேரியை களை கட்ட பார்க்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற, 5.3 சதவீத ஓட்டுகள், நிச்சயம் கிடைக்கும்' என, தற்போது தடம் மாறி பேசுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கோஷ்டி பூசல், கட்சியை இடியாப்பச் சிக்கலில் சிக்க வைத்துள்ளது. வேட்பாளர்தேர்வின்போது, அது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆதரவாளர்களுக்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்ப தாக, கட்சியின் நீண்ட கால நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுவதாக கூறுகின்றனர். சரத்குமார் கட்சியில் இருந்து வந்த கரு.நாகராஜன், ஆர்.கே.நகர் வேட்பாளர் எம்.என்.ராஜா, விக்கிரவாண்டி வேட்பாளர் பழனிவேல் ஆகியோரை, 'ஒரு பானை சோறு' உதாரணங்களாக காட்டுகின்றனர்.

இதனால், கட்சியில் பழைய நிர்வாகிகள் களப்பணியில் இறங்காமல் முடங்கி விட்டனர். கங்கை அமரன், காயத்ரி ரகுராம், விஜயகுமார் போன்ற சினிமா பிரபலங்கள் விரும்பி வந்தபோதிலும், அவர்களுக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கவில்லை.

கோஷ்டி பூசலின் வெளிப்பாடாக, ஒரு தலைவர் ஒன்றை சொல்ல, மற்றொரு தலைவர் வேறு கருத்தை சொல்வதும் வாடிக்கையாகி விட்டது. 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடைபெற வில்லை என்பதை மறுக்க முடியாது' என, இல.கணேசன் புதிர் போட,'அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என தமிழிசை, 'போட்டு உடைக்க' ஆரம்பித்தார்.

'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசி வருகிறோம்' என பொன்.ராதாகிருஷ்ணன் சொல்ல, 'தனித்து போட்டியிடுவது உறுதி' என தனி ஆவர்த்தனம் செய்தார், தேசிய செயலர் எச்.ராஜா.இந்த திசையை நோக்கி கட்சி வேகமாக போகும் நேரத்தில், யார், யாருடன் கூட்டணி

Advertisement

பேசுகின்றனர் என்பதே புதிராய் போய் விட்டது. உதாரணம், த.மா.கா.,வுடன், சில தலைவர்கள் பேசியது, தமிழிசைக்கே தெரியாது.

இதற்கிடையில், நேற்று ஒரு குளறுபடி! பா.ஜ., தேர்தல் அறிக்கை, சென்னை, கமலாலயத்தில் வெளியிடப்படும் என, தமிழிசை பேட்டி அளித்தார். சொல்லி ஓரிரு மணி நேரத்தில், அது கிருஷ்ண கான சபாவில் நடப்பதாக, அதிகாரபூர்வ தகவல் வெளியாகிறது. கட்சித் தலைமைக்கே தெரியாமல் நிறைய விஷயங்கள் நடக்கிறதா அல்லது நடப்பது எதுவுமே தெரியாமல், கட்சி தலைமை இருக்கிறதா?

நாட்டு மக்களுக்கு ஒருமைப்பாடு உபதேசம் செய்யும் கட்சியில், ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அறவே இல்லை என்பதற்கு, இதெல்லாம் அத்தாட்சிகள்.
ஒரே ஒரு ஆறுதல்!: கோஷ்டிகளாய் பிரிந்து கிடந்தாலும், மோடியை நம்பி களம் இறங்குவதில் மட்டுமே, தமிழக பா.ஜ., தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். கிராமம் தோறும் மோடி புகழ் பாட, வீதி நாடக குழுக்களுக்கு, பயிற்சி அளித்து வருகிறார், பொன்.ராதாகிருஷ்ணன். ஒத்திகை நிகழ்ச்சிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. களத்தில் தனி ஆளாக வலம் வரும் கட்சிக்கு, இந்த ஆயுதம் உதவுமா?
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-ஏப்-201609:55:53 IST Report Abuse

Ramamoorthy Pதிருவாளர் சம்பத்தின் நிலைமையே அந்த கட்சியில் ஒரு சப்பாணிக்கு இருக்கும் நிலை தான். அந்த கட்சியின் ஒரு அநாதை பேச்சாளர் இவர்.

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201603:18:18 IST Report Abuse

மலரின் மகள்சப்பாணி, நோஞ்சான், கைப்புள்ள, ஓட்டாண்டி தேறாது, எப்படி தான் பேரை தேடித் புடிப்பான்களோ. போக்கைப் பார்த்து சரியாக விமர்சனம் செய்வதில் இவர்கள் கில்லாடி போலத் தெரிகிறது.

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201602:48:08 IST Report Abuse

Sundeli Siththarகூட்டணி பற்றி திமுக, அதிமுக, மக்கள் கூட்டணி போன்றவை செய்யாத கூத்தா.. பாஜகவை குற்றம் சாற்றுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

Rate this:
மேலும் 105 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X