வேலுார்: வேலுார், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 27 தொகுதிகளின் பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், வேலுாரில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி பேசியதாவது: நாங்கள் செய்வது விஞ்ஞான ரீதியிலான அரசியல். எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. தமிழக அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும். 66 வயதுடைய தி.மு.க., சிந்திக்கும் திறனை இழந்திருக்கிறது.
அதே சமயம், முதல்வர் ஜெயலலிதாவோ, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தலுக்காக மக்களை சந்தித்து, முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், இதுவரை, ஐந்து பேர் பலியாகி உள்ளனர். கடும் வெயிலில், தண்ணீர் கூட கொடுக்காமல், மக்களை கொடுமைப்படுத்தி சாகடிக்கின்றனர். இதுகுறித்து, வழக்கு தொடுக்கப்படும்.
படித்தவர்கள் ஆட்சி செய்யக் கூடாதா? இரண்டு திராவிட கட்சிகளின் வயதான தலைவர்களை, வீட்டுக்கு அனுப்புங்கள். தமிழகத்தை இளைஞர்கள் ஆள்வதற்கு வழி செய்யுங்கள்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.