அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூர் களத்தில் புதுமுகங்கள்

Added : ஏப் 24, 2016
Advertisement

சிங்கம்புணரி: திருப்புத்துார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் புது முகங்களாக இருப்பதால் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் அனைத்து வாக்காளரையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் என்றால் திருப்புத்துார் தொகுதி முடிவை தமிழகமே எதிர்பார்க்கும். வி.ஐ.பி.,க்கள் போட்டியிடும் தொகுதியாகவே கடந்த தேர்தல் வரை இருந்தது. கடந்த தேர்தலில் தற்போதைய எம்.எல் ஏ.,கே.ஆர்.பெரியகருப்பன் , முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் தி.மு.க.,வேட்பாளர் பெரிய கருப்பன் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். அ.தி.மு.க.,கவில், தொகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் போன்றோர் களத்தில் இல்லை. அ.தி.மு.க., வேட்பாளர் கரு. அசோகன்,மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூ.,வேட்பாளர் சாத்தையா இருவரும் கல்லல் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அப்பகுதி மக்களிடம் அறிமுகமானவர்கள். பா.ஜ., கூட் டணியில், ஐ.ஜே.கே., சார்பில் போட்டியிடும் அந்தோணி லாரன்ஸ். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆசை செல்வன் தொகுதிக்கு புதுமுகங்கள்.பெரியகருப்பன் ஐந்தாண்டு அமைச்சராகவும், தற்போதைய எம்.எல்.ஏ.வாக,இருப்பதால்,தொகுதியில் அனைவருக்கும் அறிமுகமானவராக உள்ளார்.
மற்ற வேட்பாளர்கள் 5 ஒன்றியங்களில் 300 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து, தங்கள் வெற்றிக்கு ஆதரவு திரட்ட வேண்டும்.தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் பகலில் கோடை வெயிலின் கொடுமை, இரவு 10 மணிக்குள் வாக்காளர்களைச் சந்திக்கவேண்டும் என்ற நிர்பந்தம் புதுமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X