அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சீறீ பாய்கிறதா அடிபட்ட புலி

நேற்று முன்தினம், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வருமான வரித் துறையினர், தமிழகத்தில் நடத்திய ரெய்டு தொடர்பாக, பல சந்தேகங்களை பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.

சீறி பாய்கிறதா அடிபட்ட புலி?

'இவ்வளவு நாள் பிரச்னை இல்லாமல் ஓடிக்கிட்டு இருந்ததே... திடீர்னு எதுக்கு ரெய்டு?' என்பது ஒரு கேள்வி. 'இதை எதுக்கு பெரிசுபடுத்தணும்? சத்தீஸ்கரிலும் அன்னைக்கே ரெய்டு நடத்தினாங்களே... அதை வசதியாய் மறைத்து விட்டு, இட்டுக் கதை சொல்றீங்களா...' என்பது இன்னொரு கேள்வி.

சத்தீஸ்கரில் நடந்தது, வருமான வரித் துறை, தானாகவே நடத்திய சோதனை. தமிழகத்தில் நடந்தது, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி நடந்தது. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு.

ஏன் இந்த ரெய்டு? இதை அறிந்து கொள்ள, பல முன் கதைகளைப் படிக்க வேண்டும்.கடந்த லோக்சபா தேர்தலின் போதே, அ.தி.மு.க.,வுடன் எப்படியும் கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என, பா.ஜ.,வில், பிரதமர் மோடியில் இருந்து அமித் ஷா வரையில் ஆசைப்பட்டனர். ஆனால், 'நானே பிரதமர் ஆக ஆசைப்படும் போது, நான் ஏன் பா.ஜ.,வுடன் என் வெற்றியை பங்கு போட வேண்டும்?' என, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், தனித்தே போட்டியிட்டார் ஜெயலலிதா.

அனுசரித்து போக...வெற்றி அவருக்கு சாதகமாக இருந்தாலும், அதை அவர் ரசிக்க முடியாத அளவுக்கு, தமிழகத்தை தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும் பா.ஜ., பெரும் வெற்றி பெற்றுவிட்டது. 273 என்ற மந்திர எண்ணைக் கடந்து, 323 என்ற எண்ணிக்கையை எட்டியது.

இருந்த போதும் ராஜ்யசபாவில், போதுமான அளவுக்கு பா.ஜ.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அதே நேரம், ராஜ்யசபாவில், புதுச்சேரிக்கும் சேர்த்து, அ.தி.மு.க.,வுக்கு, 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பா.ஜ., இதனாலேயே, அ.தி.மு.க.,வை அனுசரித்து போக முற்பட்டது. அதனால், கசப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

உறவை நீடித்தது. நில எடுப்பு மசோதா தொடர்பாக, துவக்கத்தில்பா.ஜ.,வுடன் நல் முகம் காட்டிய, அ.தி.மு.க., திடுமென பின்வாங்கியதில், பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., மீது கடும் கசப்பு ஏற்பட்டது. இருந்த போதும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை நல்லவிதமாகவே தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார்.

ஆனாலும், ராஜ்யசாபாவில் பா.ஜ., கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், அ.தி.மு.க., - பா.ஜ.,வை விட்டுவிலகியே நின்றது.இதனால், மத்திய அமைச்சர்கள் பலரும், அடிக்கடி தமிழகம் வர துவங்கினர்.தங்கள் துறை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொண்டனர். பியுஷ் கோயல், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் என, பல அமைச்சர்களும் தமிழகம் வந்து சென்றனர்.

இதை, தமிழக அரசு தரப்பில் விரும்பவில்லை. லேசுபாசான அதிருப்திகளை அதிகாரிகள் மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், அ.தி.மு.க., தலைமை, 'ரியாக்ட்' செய்யவில்லை. கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டது. தமிழக முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி இருக்க, டில்லியில் இருந்து கிளம்பி வந்தார் பிரதமர் மோடி. தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தவர், சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார்.

அதிகரித்த இடைவெளி:பிரதமர் வருகிறார் என தெரிந்ததும், அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. இப்படி இரண்டு தரப்புக்குமான இடைவெளி அதிகரிக்க துவங்கியது.இருந்த போதும், தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என விரும்ப, கடைசி கட்ட முயற்சியும் எடுக்கப்பட்டது. அ.தி.மு.க.,வின் டில்லி முக்கிய பிரமுகரை சந்தித்து, பா.ஜ., முக்கிய தலைவர் பேசினார்.

மூன்றில் ஒரு பங்கு இடங்கள், தேர்தல் முடிந்ததும்கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என, கூட்டணி பேசினர்.ஆனால் அதை, அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. தமிழகத்தில் பா.ஜ.,வால் எந்த நன்மையும் இல்லை. கடந்த முறை போல இம்முறையும் கிட்டத்தட்ட தனித்து தான் போட்டி. ஒன்றிரண்டு சிறிய கட்சிகளும் கூட,

Advertisement

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என, முடிவெடுத்தார் ஜெயலலிதா.

அடிபட்ட புலியாக...: இதை பா.ஜ., ரசிக்கவில்லை. இருந்த போதும், லோக்சபா தேர்தலைப் போல, விஜயகாந்தை வைத்து கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி. இதனால், தமிழகத்தில் தனித்து விடப்பட்டு விட்டது.விளைவு*ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை என, பா.ஜ., மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனம்* ஜெ., பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, தீவிர அரசியல்*ஜெயலலிதா போகும் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி. அதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது* தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் தீவிரம்*முடுக்கி விடப்பட்ட வருமானவரித்துறை; தமிழகம் முழுவதும், 45 இடங்களில் ரெய்டு*கரூரில் அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, குடோன் ரெய்டு. பல கோடி ரூபாய் பறிமுதல்; அதே கரூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணிமாறன் வீடு, குடோனில் ரெய்டு; 5 கோடி ரூபாய் பறிமுதல்.

இப்படி தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், வருமான வரித் துறை மூலமாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.,வை பழிவாங்கத் துடிக்கிறது பா.ஜ., என, ஆளும்கட்சித் தரப்பில் இருந்து பொருமல் சத்தம் கேட்க துவங்கி உள்ளது.

தேர்தல் நடக்க இன்னும், 20 நாட்களே உள்ளன. பொருமல் சத்தம் கூட வெளிவர முடியாத அளவுக்கு நெருக்கடி அதிகரிக்குமா அல்லது நெருக்கடியைத் தாண்டி, அ.தி.மு.க., வெற்றிக் கனி பறிக்குமா என்பதை அறிய, வழக்கம் போல காத்திருப்போம்!
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உண்மை விளம்பி - காஜாங்,மலேஷியா
25-ஏப்-201618:29:49 IST Report Abuse

உண்மை விளம்பிபொய் சொல்லப்படாது

Rate this:
Chowkidar N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
25-ஏப்-201618:20:52 IST Report Abuse

Chowkidar N.Purushothamanதன்னிச்சை அமைப்பான தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு வளைக்க முடியுமா என்ன ?

Rate this:
mridangam - madurai,இந்தியா
25-ஏப்-201617:03:39 IST Report Abuse

mridangamஇது அடிபட்ட புலியா அல்லது அட்டை புலியா ? raid செய்தால் பிஜேபி, செய்யாவிட்டால் election commission அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அரசில் இருக்கும் அரசியல் கட்சி பொறுப்பு , strike செயதாலும் அரசியல் கட்சி பொறுப்பு நல்ல இருக்கு நம்ம லாஜிக் ... நம்ம மக்கள் என்னக்கி issue based politics புரிய போஹிறது ?

Rate this:
மேலும் 102 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X