சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு இரு கட்டமாக செயல்விளக்கப் பயிற்சி

Added : ஏப் 24, 2016
Share
Advertisement
விருத்தாசலம்: ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு இரண்டு கட்ட செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உள்ள 272 ஓட்டுச் சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 1693 ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களுக்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து காலை, மாலை என இரண்டு கட்டங்களாக பயிற்சியளிக்கப்பட்டது.விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,

விருத்தாசலம்: ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு இரண்டு கட்ட செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உள்ள 272 ஓட்டுச் சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 1693 ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களுக்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து காலை, மாலை என இரண்டு கட்டங்களாக பயிற்சியளிக்கப்பட்டது.விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., வளாகத்தில் நடந்த பயிற்சியை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். தாசில்தார் முரளி, நேர்முக உதவியாளர் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார் உட்பட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.பயிற்சியில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாள்வது, பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வது, மாற்று இயந்திரங்களை ஏற்பாடு செய்வது, ஓட்டுச் சாவடி மையங்களில் பணிபுரிவது குறித்து புரொஜக்டர் மூலம் மண்டல அலுவலர்கள் பயிற்சியளித்தனர். தொடர்ந்து, தபால் ஓட்டு போட, ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களிடம் படிவம் 12 பூர்த்தி செய்து பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X