அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை

Added : ஏப் 24, 2016
Advertisement
 அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை

அலிகார்:உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது. இதில், முன்னாள் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக, மாணவர் விடுதியில், முன்னாள் மாணவர்கள் பலர் விதிமுறைகளை மீறி தங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவு மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இரு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக மோதினர். அப்போது, மாணவர் ஒருவரின் அறையை, மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர்; அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன. மாணவர்கள் துப்பாக்கியால், ஒருவருக்கு ஒருவர் சுட்டதில், முன்னாள் மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
பலியானவர் பெயர் மக்தாப். இவர், பல்கலைக்கழகத்தில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட மாணவர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். 'மாணவர் விடுதியில் தங்கியுள்ள, வெளிநபர்களை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X