நடிக்க தெரியவில்லை உனக்குஎன்றவர் மீது மாலாஸ்ரீ வழக்கு | Dinamalar

'நடிக்க தெரியவில்லை உனக்கு'என்றவர் மீது மாலாஸ்ரீ வழக்கு

Added : ஏப் 24, 2016
Share
பெங்களூரு:'மாலாஸ்ரீக்கு நடிக்க தெரியவில்லை; அவரால் திரைப்படம் நின்றுவிட்டது' என கூறியதன் மூலம், அவரது கவுரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்திய இயக்குனர் இம்ரான் மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக, நடிகையின் கணவர் தெரிவித்துஉள்ளது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. பிரபல கன்னட நடிகை மாலாஸ்ரீயின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ராமு கூறியதாவது:நானும், பல திரைப்படங்களை
 'நடிக்க தெரியவில்லை உனக்கு'என்றவர் மீது மாலாஸ்ரீ வழக்கு

பெங்களூரு:'மாலாஸ்ரீக்கு நடிக்க தெரியவில்லை; அவரால் திரைப்படம் நின்றுவிட்டது' என கூறியதன் மூலம், அவரது கவுரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்திய இயக்குனர் இம்ரான் மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக, நடிகையின் கணவர் தெரிவித்துஉள்ளது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
பிரபல கன்னட நடிகை மாலாஸ்ரீயின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ராமு கூறியதாவது:நானும், பல திரைப்படங்களை தயாரித்துள்ளேன். எந்த கலைஞரையும் தனிப்பட்ட முறையில் அவமதித்ததில்லை. ஆனால், உப்பு- ஹூளி- காரா திரைப்படத்தில், மாலாஸ்ரீ தான் நடிக்க வேண்டுமென விரும்பி, கதையை கூறி அவரை சம்மதிக்க வைத்தனர்.
இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின், 'மாலாஸ்ரீக்கு நடிப்பு வரவில்லை. இதனால் திரைப்படத்தையே நிறுத்திவிட்டோம்' என, கூறினால் என்ன அர்த்தம்? மாலாஸ்ரீயின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், இயக்குனர் இம்ரான் சர்தாரியாவும், தயாரிப்பாளர் மஞ்சுவும் சேர்ந்து சதி செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக, மாலாஸ்ரீ மீது ஊடகங்களில் வெளியாகும் பொய்யான குற்றச்சாட்டுகளால் வேதனை அடைந்துள்ளோம். எனவே இம்ரான், மஞ்சு ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளோம். இந்த இருவரும், மாலாஸ்ரீக்கு எதிராக சுமத்திய பொய்யான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X