சென்னை:'கரூரில் சிக்கிய பணம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர். அ.தி.மு.க., ஆட்சி, தமிழகத்தில் எவ்வாறு
நடைபெறுகிறது, ஜனநாயகத்தையும், தேர்தல் விதிகளையும், எந்த அளவுக்குப்
பின்பற்றுகிறது என்பதற்கு,
சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பணமே சாட்சி.
கரூர் அன்புநாதன் என்பவர் யார்? மணிமாறன் யார்? இவர்களுக்கும், அமைச்சர் நத்தம் விசுவநாதனுக் கும் என்ன சம்பந்தம்? எதற்காக,இந்தப் பணப் பரிமாற்றம். வாக்காளர்களுக்கு கொடுத்து, வெற்றி பெற்று, மறுபடியும் தமிழகத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற நப்பாசையா?முதல்வர் ஜெயலலிதா இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், தேர்தல் பிரசாரத்தில், என்னை பார்த்து கேள்வி கேட்கிறார்.
நானா இந்த நாட்டை, கடந்த ஐந்தாண்டு காலமாக, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். கன்டெய் னர்களும், ஆம்புலன்ஸ் வண்டிகளும், கேமராவும் கைப்பற்றப்பட்டிருக்கின்றனவே; எதற்காகக் கைப்பற்றப்பட்டன.
கேமராவில் பதிவாகிஇருக்கும் காட்சிகளைப் பற்றிய விவரங்கள் என்ன?
கைப்பற்றப்பட்டிருப்பது நாலரை கோடி ரூபாயா, 100 கோடி ரூபாயா, 250 கோடி ரூபாயா என்பன போன்ற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு முறையான பதில் சொல்லி விட்டு, என்னை பார்த்து கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (93)
Reply
Reply
Reply