பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து

Added : ஏப் 25, 2016 | கருத்துகள் (26)
Advertisement
supreme court, dance bars, சுப்ரீம் கோர்ட், டான்ஸ் பார்

புதுடில்லி : டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று மீண்டும் டான்ஸ் பார்களுக்கு ஆதரவான கருத்தை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது. இவ்வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் பெஞ்ச், தெருக்களில் பிச்சை எடுப்பதை விட நடனமாடி சம்பாதிப்பது மேல் என தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தும், புதிய பார்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தும் அம்மாநில அரசு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து மகாராஷ்டிர டான்ஸ் பார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஷிவ் கிர்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டான்ஸ் பார்களுக்கு தடை விதிக்க முடியாது என சமீபத்தில் கூறி இருந்தது.
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, டான்ஸ் பார்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், டான்ஸ் பார்களில் நடனமாடி பெண்கள் சம்பாதிப்பது அரசியலமைப்பு உரிமை. தெருக்களில் இறங்கி பிச்சை எடுப்பதையும், தவறான தொழிலில் ஈடுபடுவதையும் விட நடனமாடி சம்பாதிப்பது மேல். கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு ஒரு கி.மீ., சுற்றளவில் டான்ஸ் பார்கள் அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் கட்டுப்பாட்டை பட்நாவிஸ் அரசு அகற்ற வேண்டும். திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி, 10 நாட்களுக்குள் டான்ஸ் பார்களுக்கு மும்பை போலீஸ் உரிமம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
27-ஏப்-201600:21:51 IST Report Abuse
Indhiyan பிச்சை எடுப்பதற்கு விபச்சாரம் பரவாயில்லையா என்பதை கோர்ட் தெளிவு படுத்தினால் நல்லது. ஏனென்றால் டான்ஸ் பார்களில் கிட்ட தட்ட விபசாரத்துக்கு பக்கத்தில், காட்டிதான் ஆடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
abu lukmaan - trichy,இந்தியா
26-ஏப்-201606:19:31 IST Report Abuse
abu  lukmaan மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்திருக்கும் விபசார தொழிலுக்கு , டான்ஸ் பார் தேவலை என கோர்ட் நினைத்து இருக்கலாம் .அதை சொல்ல முடியமால் பிச்சை என கூறி இருக்கலாம் . என்ன கருமமோ .
Rate this:
Share this comment
Cancel
kuttizen - Erode,இந்தியா
26-ஏப்-201604:30:24 IST Report Abuse
kuttizen அடுத்த கட்டமாக, பிச்சை எடுப்பதை விட திருடுவது நல்லது... தப்பு தப்பா பதில் எழுதி பெயிலாவரத விட பிட் அடித்து பாஸ் ஆவது நல்லது.. காவல் துறை சேவையை விட வெள்ளை வேட்டி/பைஜாமா/குர்தா போட்ட குண்டர்களின் சேவை நல்லதுங்கற மாதிரியான புரட்சிகரமான தீர்ப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம். இதுக்கு எங்க ஊரு அரச மரத்தடி பஞ்சாயத்து 1000 மடங்கு தேவலாம். தீர்ப்பைக் கொடுத்த பின்னும் ஊர் மக்கள் மூஞ்சியில முழிக்கணுமேங்கர உறுத்தல் அவங்க மனசிலே இருக்கும். இவிங்களுக்கு எந்த விதமான உறுத்தலும் கிடையாது போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X