பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:'டான்ஸ் பார்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

Updated : ஏப் 26, 2016 | Added : ஏப் 26, 2016
Advertisement
 பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:'டான்ஸ் பார்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி:மும்பையில், 'டான்ஸ் பார்'களுக்கு தடை விதித்தது தொடர்பான வழக்கில், 'பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட, நடனமாடுவது சிறந்தது தான்' என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
உரிமம் வழங்க...மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 'டான்ஸ் பார்'களுக்கு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'டான்ஸ் பார்'கள் தரப்பில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
'டான்ஸ் பார்'களுக்கு தடை கோரிய மனுதாரர்கள் தரப்பில், 'பார்களுக்குள் நடக்கும் நடனங்கள், கலை நடனமல்ல; ஆபாச நடனம் தான்' என, தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த நடனங்களை, நாங்கள் கலையாகவே பார்க்கிறோம். தெருக்களில் பிச்சை எடுப்பது, சட்ட விரோதமான முறையில் சம்பாதிப்பதை விட, நடனமாடுவது சிறந்ததே. நடனமாடுவது, தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
சரி பார்க்க வேண்டும்:மேலும், 'டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்' என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, 'ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X