தேர்தலில் ஓட்டுப்போட, கட்சிகள், பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, 21 ஆயிரத்து, 300 இளைஞர் குழுக்களை, தேர்தல் கமிஷன் தயார் செய்துள்ளது. இதனால், இம்முறை வாக்காளர் களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் ஓட்டுப்போட, வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருள் கொடுப்பது, தமிழகத் தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசியலில் லஞ்ச ஊழல் பெருகுவதுடன், பண பலமிக்கவர்களே வெற்றி பெற முடியும் என்ற நிலைமையும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த தேர்தலில், பண பட்டுவாடாவை எப்படியும் தடுத்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன், தேர்தல் கமிஷன் களம் இறங்கி உள்ளது.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை பறிமுதல் செய்ய, வருமான வரித் துறை அதிகாரிகள் குழு, களம் இறக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும், வருமான வரித்துறை அதிகாரிகளை கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
வாகனங்களில் பணம் கொண்டு செல்வதை தடுக்க, தொகுதிக்கு, தலா, மூன்று பறக்கும்
படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வி.ஐ.பி.,க்கள்
போட்டியிடும் தொகுதி, பதற்றமான தொகுதி, பண நடமாட்டம் அதிகம் உள்ள தொகுதி
போன்றவற்றில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள்
எண்ணிக்கையை, தலா மூன்றில் இருந்து, ஐந்தாக உயர்த்தவும், தேர்தல் கமிஷன்முடிவு செய்துள்ளது.
இது தவிர, பணம் நடமாட்டம், பணம் பதுக்கல், பணம் பட்டுவாடா குறித்து தகவல் தெரிவிக்க, கிராமம் தோறும் இளைஞர் குழு அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும், 21 ஆயிரத்து, 300 இளைஞர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில், 10 முதல், 15 இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். அனைவரும், 30 வயதிற்கு உட் பட்டவர்கள். படித்தவர்கள். கட்சி சாராதவர்கள். இவர்கள் பணம் பதுக்கல் குறித்து, அதிகாரி களுக்கு தகவல் அளித்து வருகின்றனர். தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுப்பதில், இவர்களின் பங்கு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இம்முறை வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தெரிகிறது.
ரகசியம் காக்கப்படுகிறது:
இதுகுறித்து, தமிழகத் தலைமை
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது::இளைஞர் குழுவில் இணைய, இளைஞர்கள் ஆர்வமாக முன்வந்தனர். அவர்களிடம், புகார் தெரிவிப்பதற் கான, 'வாட்ஸ் ஆப்' எண், கட்டணமில்லா டெலிபோன் எண், தேர்தல் நடத்தும் அலுவலர் எண் ஆகியவற்றை அளித்துள்ளோம்.
இளைஞர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரத்தை ரகசியமாக வைத்துள்ளோம். அவர்கள், பட்டுவாடா மட்டுமின்றி, அவர்கள் வசிக்கும் பகுதியில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும், உடனடியாக தகவல் தெரிவிப்பர்.தற்போது, ஏராளமானோர் தகவல் கொடுத்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க, இது உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புகார் தெரிவிக்கபல வழிகள்:
பணம் பதுக்கல் தொடர்பாக, புகார் தெரிவிக்க விரும்புவோர், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள, கட்டணமில்லா டெலிபோன் எண், 1950க்கு, தகவல் தெரிவிக்கலாம்.வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிப்பதற்காக, கட்டணமில்லா எண், 18004256669 அறிவிக்கப்பட்டுள்ளது; அதிலும், புகார் செய்யலாம்.'வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் அனுப்ப விரும்புவோர், 94441 23456 என்ற எண்ணை பயன்படுத்த லாம்; இந்த எண்ணில் பேச முடியாது.தேர்தல் கமிஷன் இணையதளம் மூலமாகவும், புகார் செய்யலாம்.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (65)
Reply
Reply
Reply