அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் ஊழலில் தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு பங்கு: மார்க்சிஸ்ட் வெள்ளை அறிக்கை வெளியீடு

Added : ஏப் 29, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: ''தமிழகத்தில் நடந்த கிரானைட் ஊழலில் தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு நேரடி பங்கு உள்ளது,'' என கிரானைட் கொள்ளை குறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிரானைட் முறைகேடு பற்றிய விசாரணையில் அ.தி.மு.க., தான் நடவடிக்கை எடுத்தது என மதுரையில் ஜெயலலிதா கூறினார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கிரானைட்

மதுரை: ''தமிழகத்தில் நடந்த கிரானைட் ஊழலில் தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு நேரடி பங்கு உள்ளது,'' என கிரானைட் கொள்ளை குறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிரானைட் முறைகேடு பற்றிய விசாரணையில் அ.தி.மு.க., தான் நடவடிக்கை எடுத்தது என மதுரையில் ஜெயலலிதா கூறினார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த முதலில் உத்தரவிட்டது தி.மு.க.,தான் என்கிறார். உண்மையில் முறைகேட்டின் மூலம் பலனடைந்தது இவ்விரு கட்சிகளும் தான்.
மதுரையில் கிரானைட் கொள்ளை முந்தைய தி.மு.க., ஆட்சியில் நடந்தது. மதுரையில் மட்டும் 1991 - 2011 வரை 176 குவாரிகளுக்கும், 2002ல் 36 குவாரிகளுக்கும், 2003ல் 139 குவாரிகளுக்கும் அனுமதிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் 2001-06 வரை 77 குவாரிகளுக்கும்,
2006-11 வரை தி.மு.க., ஆட்சியில் 68 குவாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. கிரானைட் கொள்ளையில் இரண்டு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது.
மதுரை மாவட்ட கனிமத்துறை துணை இயக்குனராக சண்முகவேல் 2003-05 வரை இருந்த போது குத்தகை காலத்திற்கு பிறகும் பல குவாரிகள் முறைகேடாக செயல்படவும், தேசிய சின்னங்களுக்கு அருகே குவாரி நடத்தவும் அ.தி.மு.க., ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது.
சகாயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மதுரையில் ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி அளவிற்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். கிரானைட், தாது மணல், ஆற்று மணல் கொள்ளைகள் பின்னணியில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உள்ளன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-201610:16:24 IST Report Abuse
P R Srinivasan திமுக மற்றும் அதிமுக நாட்டின் சொத்தை சூரையாடியிருக்கின்றனர். நேர்மையான அதிகாரியான சகாயம் அவர்களை அவருடைய பணியை சரிவர ஆற்றமுடியாமல் செய்திருக்கின்றனர். மக்களை ஏமாற்றி மாறி மாறி ஜெயித்திருக்கிறார்கள் இந்த 2 கட்சியும். இவர்களுக்கு மாற்று வந்தால் ஒழிய உண்மை வெளி வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X