மதுரை,: ''ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸ்டைல்' உண்டு. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அவர் எங்களை 'ரொம்ப நல்லவங்கன்னு' கூறி வருகிறார்,'' என மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்
'சப்பைக்கட்டு' கட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது:சேலத்தில் பேசிய விஜயகாந்த், 'நான் நல்லவர்கள் கூட்டணியில் இருக்க ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார். நல்ல தலைவர்களுடன் உள்ளேன்' என்றார். விஜயகாந்தை எப்படியாவது தம் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதற்காக பல கட்சியினர் தவம் இருந்தனர். ஆனால் அவர் ஊழலற்ற, நேர்மையான, உழைக்கும் கட்சிகளான எங்களுடன்
கூட்டணி வைத்தார், என்றார்.''விஜயகாந்த் செயல்பாடுகள் மக்கள் நலக்கூட்டணிக்கு பாதகம் ஏற்படும் வகையில் உள்ளதே'' என நமது நிருபர் கேட்டதற்கு, ''ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. விஜயகாந்திற்கும் ஒரு ஸ்டைல் (நாக்கை துருத்துவது... அடிக்கப்பாய்வது...) உள்ளது. அவர் எங்களை ரொம்ப நல்லவங்கன்னு கூறி வருகிறார்,'' என்றார்.
''விஜயகாந்த் பிரசாரம் செய்யாமல் மவுனமாக இருந்தால் போதும். ம.ந., கூட்டணிக்கு ஓட்டு விழும்'' என்ற கருத்து நிலவுகிறதே என கேட்டதற்கு, ''அது உங்களது கருத்து,'' என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE