எது தேசத்துரோகம், தேச பக்தி, நாட்டுப்பற்று?| Dinamalar

எது தேசத்துரோகம், தேச பக்தி, நாட்டுப்பற்று?

Updated : ஏப் 30, 2016 | Added : ஏப் 30, 2016 | கருத்துகள் (3)
எது தேசத்துரோகம், தேச பக்தி, நாட்டுப்பற்று?

நம் நாடு சுதந்திரம் அடைந்து, 69 ஆண்டுகள் ஆனபின்னும், நாம் இம்மாதிரி விவாதித்துக் கொண்டு இருக்கும் நிலைமையை, சமீபகாலங்களில் ஏற்படுத்தி வருகின்றனர். இது வேதனை அளிக்கும் விஷயம். இன்னொரு வயிற்றெரிச்சல், இந்தியா என்ற பெயர் சரிதானா, பாரத் என்பதா, ஹிந்துஸ்தான் என்பதா போன்ற விவாதங்கள் எல்லாவற்றையும் விட மோசமான விவாதம். 'ஹிந்து' மதம் என்பது சரிதானா, அது எப்படி இப்பெயர் பெற்றது. அதற்கு வேறு பெயர் கிடையாதா?ஒருவர் ஒருபடி மேலே போய், இந்துமதம் என்பதே கிடையாது என்று, ஒரு போடு போடுகிறார். மற்றொருவர் ஹிந்து என்றால், 'திருடன்' என்று பொருள் என்கிறார், தானே ஒரு இந்துவாக இருந்து கொண்டு. அவர் கிறிஸ்துவர்களைப் பற்றியோ, முஸ்லிம்களைப் பற்றியோ இப்படி எதையும் கூறிவிட முடியுமா, இம்மாதிரி விவாதங்கள் வேறெந்த நாட்டிலும் நடப்பதில்லை.சரி, எது தேசத் துரோகம், தேச பக்தி, நாட்டுப்பற்று? இப்போது, இவை நாட்டில் ஒரு பெரிய கேள்வியாக விசுவரூபமெடுத்து நிற்கிறது. இதெற்கெல்லாம் மூலகாரணம், நம் நாட்டில் அதிமேதாவிகள் அதிகம் இருப்பது தான். இவர்களை அலட்சியம் செய்யவும் கூடாது. இவர்கள் காசுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.பிறந்த நாட்டை எதிரிகளுக்கு காட்டிக் கொடுப்பது தேசத் துரோகம்தேசியக் கொடியை அவமதிப்பது, தேசத் தியாகிகளை அவமதிப்பது, தேசத் துரோகம். தேசிய கீதத்தை அவமதிப்பது தேசத் துரோகம்இந்தியனாக இருந்து, கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று பாகுபாடு செய்வது தேசத் துரோகம்மக்கள் வரிப் பணத்தை சூறையாடுவது தேசத் துரோகம்ஜாதியின் பெயரால் கொலைகள் நடப்பது தேசத் துரோகம்நாட்டின் கனிமங்களை சுரண்டி, கொள்ளையப்படிப்பது தேசத் துரோகம்வரி கொடாமல் அரசை ஏமாற்றி, கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது தேசத் துரோகம்.ஊழல்களில் ஈடுபட்டு பணம் கொள்ளையடிப்பது தேசத் துரோகம்அரசியல்வாதிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மக்களுக்கு எதுவும் செய்யாமல், அவர்களை பார்க்காமல், தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மட்டும் பணம் கொள்ளையடித்து பதுக்குவது தேசத் துரோகம் படித்தவர்கள், அறிஞர்கள், தேசாபிமானிகள், நாட்டில் எது நடந்தாலும் சும்மா வேடிக்கை பார்ப்பது தேசத் துரோகம்ஜனநாயக நாட்டை, பணநாயகமாக ஆக்கிக் கொண்டிருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் தேசத் துரோகிகள் தான்ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் மக்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவ வசதி, கல்வி, மின்சாரம், சாலைகள், குடிதண்ணீர், பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, விவசாயிகள் நல்வாழ்வு, இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சுயநலமாகவே செயல்படுவது தேசத் துரோகம்பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் தேசத்தில், சதாசர்வ காலமும் சிறுபான்மையினருக்காகவே அவர்களின் ஓட்டைப் பெற, பேசி வருவது தேசத் துரோகம்l மனசாட்சியே இல்லாமல் இருப்பது தேசத் துரோகம்.காந்திஜி, நேரு, படேல், ராஜாஜி, காமராஜர் போன்றவர்களோடு போயே போய் விட்டது நேர்மை, நியாயம், சத்தியம் எல்லாம். தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், இன்று, படு மட்டமான இறந்து விட்ட கட்சியாக காட்சியளிக்கிறது. காரணம், இப்போதுள்ள அதன் சுயநலமிக்க ஊழல் மிக்க சந்தர்ப்பவாத தலைவர்கள்.ஜனநாயகம் என்ற பெயரால், இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான ஜாதியக்கட்சிகள் வலம் வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் தேவை. தலித் சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு, இப்போதுள்ள அரசியல்வாதிகள் தான் காரணம். தங்களுக்கு சாதகமாக அப்பாவி மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர். ஜாதி சண்டைகளை கிளறி அதில் குளிர் காய்கின்றனர்.அரசியல்வாதிகள் என்பவர்கள், காஷ்மீர் முதல் குமரி வரை உள்ள எல்லா அரசியல்வாதிகளையும் தான்; எல்லாம் எரியும் கொள்ளிகள். அதில் நல்லது எது? இன்றைய அரசியல்வாதிகள், கேடு கெட்ட, மனசாட்சி அற்றவர்கள்.இ-மெயில்: srievatsaedu@vsnl.net- எஸ்.ஆர்.ராஜகோபாலன் -கல்வி ஆலோசகர், சமூக ஆர்வலர்We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X