அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 வேட்பாளர்கள், திக் திக்!

தமிழகம் முழுவதும், இன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பணம் வினியோகத்தை தடுக்க, கூடுதல் பறக்கும் படைகளுடன், தேர்தல் கமிஷன் சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கி உள்ளது. இதனால், தேர்தல் செலவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல், 'திக்... திக்...' மனதுடன், வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

 வேட்பாளர்கள், திக் திக்!

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்., 22ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஏப்., 29ம் தேதி நிறைவு பெற்றது. நான்கு திருநங்கையர், 794 பெண்கள், 6,358 ஆண்கள் என, மொத்தம், 7,156 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனையின் போது 2,956 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4,200 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

குலுக்கல் முறையில்...:

அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், இன்று மாலை, 3:00 மணிக்குள், மனுவை வாபஸ் பெறலாம்; அதன்பின், வாபஸ் பெற முடியாது. மாலை, 3:00 மணிக்கு மேல், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.
ஒரே சின்னத்தை, இரண்டு அல்லது அதற்கு

மேற்பட்ட நபர்கள் கேட்டால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். சின்னம் ஒதுக்கப்பட்ட பின், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.இதுவரை மந்தமாக இருந்த பிரசாரம், இனிமேல் தான் களைகட்டும். தினமும் பிரசாரத்திற்கு, லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், பணத்தை வெளியில் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வாகன சோதனை:

பணம் வினியோகத்தை தடுக்க, தேர்தல் கமிஷன் சுறுசுறுப்பாக களம் இறங்கி உள்ளது. இதுவரை ஒவ்வொரு தொகுதியிலும், தலா, மூன்றுபறக்கும் படை, மூன்று நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டது.தேர்தல் கமிஷன் கெடுபிடிகளால், வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பணத்தை வெளியில் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இதனால், தேர்தல் பிரசாரத்தை எப்படி மேற்கொள்வது, தேர்தல் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை துாவி, எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என, பிரதான கட்சி வேட்பாளர்கள், 'திக்... திக்...' மனதுடன் வலம் வருகின்றனர்.

துணை ராணுவம் வருகை:

தமிழகத்திற்கு, 300 கம்பெனி ராணுவ வீரர்கள், மேற்கு வங்கத்தில் இருந்து வர உள்ளனர். அவர்களில், 248 கம்பெனி துணை ராணுவ வீரர்கள், நேற்று இரவு கோல்கட்டாவில் இருந்து, 16 சிறப்பு ரயில்களில், தமிழகம் புறப்பட்டனர். அவர்கள், 3ம் தேதி இரவு அல்லது, 4ம் தேதி காலை, சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களை வந்தடைவர். மீதமுள்ள, 52 கம்பெனி துணை ராணுவ வீரர்கள், 3ம் தேதி இரவு விமானம் மூலம், தமிழகம் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

Advertisement

இம்மாதம் இரண்டாம் வாரத்தில், தலைமைத் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வர வாய்ப்புள்ளது.
ராஜேஷ் லக்கானி
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி


தினமும் பணம் பறிமுதல்:

இன்று முதல், 200 தொகுதிகளில், பறக்கும் படை எண்ணிக்கை, மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகளும், தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தினமும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.நேற்று முன்தினம், கடலுார், மஞ்சக்குப்பம் பகுதியில், மினி லாரியில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக ஏற்றப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்துார் மெயின் ரோடு, பால்னாங்குப்பம் என்ற இடத்தில், பறக்கும் படை அதிகாரிகள், இரண்டு லாரிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகளை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் தே.மு.தி.க., வேட்பாளர் உதயகுமார், நேற்று மதியம் மரக்காணத்தில் இருந்து, புதுச்சேரிக்கு காரில் சென்றார். அனுமந்தை சுங்கச்சாவடி அருகே, நிலைய கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில், காரில் இருந்த, மூன்று லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மதுரையில்...:

மதுரை ஜெய்ஹிந்தபுரத்தில், சைக்கிளில் சென்ற செட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷிடம் இருந்து, 7.60 லட்சம் ரூபாய்; சிம்மக்கல் பகுதியில், மோகன்குமார் என்பவரிடம் இருந்து, இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம்; ஒத்தக்கடையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, 60 பிரிஜ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-மே-201613:13:04 IST Report Abuse

D.Ambujavalliபோலிஸ் போலவே தேர்தல் ஆணையமும் 'எல்லாம் ' முடிந்த பிறகுதான் விழித்துக்கொண்டு 'நடவடிக்கை' எடுக்கும் நல்ல டிராமா

Rate this:
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
02-மே-201612:17:37 IST Report Abuse

கேண்மைக்கோ சேகர் மிக்க நல்லது

Rate this:
Subramaniam Ramesh - madurai,இந்தியா
02-மே-201612:04:57 IST Report Abuse

Subramaniam Rameshவணக்கம், தேர்தல் என்றால் என்ன? தமிழகத்தை நிர்வாகம் செய்வதற்கு ஒரு அரசினை மக்களே தேர்ந்தெடுப்பது.. ஆனால் தமிழகத்தில் மட்டுமே அது ஒரு வணிக நோக்கினால் செயல்படும் ஒரு வியாபாரம், இங்கே மட்டுமே தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறி அரசியலையே தொழிலாக செய்கின்றனர், அதிலும் மேலாக தி மு க வினர் செய்யும் வியாபாரம் அமோகம், ஒரு வணிக நோக்கினால் செய்யும் வேலைக்குதான் விளம்பரம் தேவை, இங்கே தி மு க வினர் எந்த ஒரு browser சென்றாலும் இவர்களின் விளம்பரம் தான் அதிகம், ஏன் இந்த விளம்பரம், இவர்கள் நல்லது செய்திருந்தால் விளம்பரம் தேவை இல்லையே, நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று இன்று கூறுபவர்கள் ஆட்சியில் இருக்கும் போது செய்திருந்தால் அவர்களுக்கு இந்த விளம்பர செலவு தேவை இல்லாததுதானே, ஏன் அவர்கள் ஆட்சி இழந்து இப்பொழுது நஷ்டம் ஆகி மறுபடியும் விளம்பரம் மூலம் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர், நல்ல சேவை செய்ய விளம்பரம் எதற்கு, இவர்களுக்கும் poothys க்கும் என்ன வித்தியாசம், இருவருமே வியாபார நோக்கமே, இவர்களின் விளம்பரத்தை பார்த்தல் கண்டிப்பாக இவர்களுக்கு வாக்கு அளிக்க கூடாது என்றே தோன்றுகிறது, இவர்களின் நோக்கம் சமூக முன்னேற்றதிற்கானது அல்ல, இதில் அ தி மு க வும் யோக்கியன் இல்ல, எவன் தி மு க பிடிக்காது என்பவனே அ தி மு க வுக்கு ஒட்டு போடுகிறான், இருவருமே சமூக சிந்தனை இல்லாதவர்கள், அரசு கல்லூரியில் ஆசிரியர் வேலை வேன்டும்மென்றால் கட்சி லஞ்சமாக 7 லட்சம் வாங்க சொல்லுது, ஆனால் அந்த அமைச்சரோ 20 லட்சம் வாங்குகிறார், இதனை கொடுக்க தயாராக இருக்கும் அந்த ஆசிரியர், இதில் யார் தவறு அதிகம், 3 பேருமே அரசு சம்பாத்த பட்டவர்கள், இவர்களுக்கு தனது வியாபாரமே முக்கியம், இதே பூல ஒவ்வொரு அரசு சம்பத்தப்பட்டதும் இதே போல வியாபார நோக்கினால் நடைபெறுகிறது, இன்று விடுங்கள் ஒரு 20 வருடம் கழித்து உங்கள் பிள்ளைகளின் நிலை, நல்ல சமூகம் இல்லாத உங்கள் குழந்தைகளின் நிலை, இதில் இறைவனை மேல பாரத்தை போட்டு அடுத்த கட்ட வேலைக்கு செல்லும் சாதாரன பொது மக்களில் நானும் ஒருவன், இவர்களை திருத்த முடியாது ஆனால் நாம் திருந்த முடியுமே, லஞ்சம் குடுக்காமல் இருக்க வேண்டும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை மாட்டி விட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை முழுவதும் பயன்படுத்த வேண்டும், சட்டத்தினை மதிக்க வேண்டும், சுய ஒழுக்கம் வேண்டும், நமது பிள்ளைகளை இவர்களின் வேசத்தினை புரியும் படி வளர்க்க வேண்டும், இன்னும் எவ்வளவோ............. நாம்தான் திருந்த வேண்டும் நமது பிள்ளைகளுக்காக.........

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X