பதிவு செய்த நாள் :
மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம்?

பா.ம.க., மீது விழுந்த ஜாதி மற்றும் வன்முறை முத்திரையை அழிக்க, அன்புமணி ரொம்ப சிரமம் எடுத்தார். அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவரை முன்னிறுத்தியதும், அவரது பேச்சும் செயலும், பா.ம.க.,வுக்கு புதிய அடையாளத்தை தேடி தந்தது. படித்தவர்கள் புழங்கும் சமூக வலை தளங்களில், அன்புமணி பேச்சும் நடத்தையும் பெரிதாக கவனிக்கப்பட்டது. ஆதரவு விமர்சனங்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

 மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம்?


* சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கூனாண்டிபுதுாரில், நேற்று முன்தினம் மதியம், மக்கள் தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்திபன் ஓட்டு சேகரிக்க சென்றபோது, பா.ம.க.,வினருக்கும், தி.மு.க.,வினருக்கும்
தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, பா.ம.க.,வினர் சாலையில் கற்களை போட்டு, பார்த்திபன் மற்றும் தி.மு.க.,வினரை அங்கிருந்து நகர முடியாதபடி தடுத்தனர்.
டி.எஸ்.பி., நடராஜன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு மணி நேரத்திற்கு பின், மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
* சட்டசபை தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ள நிலையில், பா.ம.க.,வினர், செல்வாக்கு உள்ள பகுதியில், தொடர்ந்து பெரியளவில் வன்முறையை கட்டவிழ்த்து விட முடிவு செய்துள்ளதாக, உளவுத் துறையினர், அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை உஷார்படுத்தி உள்ளனர்.
* குறிப்பாக, மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கோனுார், கருங்கல்லுார், கத்திரிப்பட்டி, மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம், செட்டிகிரிப்பட்டி, கூனாண்டிபுதுார் ஆகிய பகுதியில், பா.ம.க.,வினரால் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை, 'அலர்ட்' செய்துள்ளது.
* ஓமலுார், சங்ககிரி தொகுதியிலும், பா.ம.க.,வினர் வன்முறையில்


ஈடுபட வாய்ப்புள்ளதாக, போலீசாருக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட நத்த மேட்டில், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு அமைச்சர் பழனியப்பன், ஓட்டு சேகரிக்க சென்றபோது, பா.ம.க.,வினர் அவரை தாக்க முயன்றனர். அவருடன் வந்தவர்கள் மீதும், அவர்களது வாகனத்தின் மீதும் கல்வீசி தாக்கியதுடன், செருப்புகளை வீசினர். மேலும், மரங்களையும்,
கற்களையும் சாலையில் போட்டு தடையை ஏற்படுத்தினர்.
- புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ள, பா.ம.க.,வின் சமீபத்திய இரண்டு நாட்களின் நடவடிக்கைகள், அக்கட்சி பழைய பாதைக்குத் திரும்பி விட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
சேலம், ஓமலுார், மேட்டூர், சங்ககிரி சம்பவங்கள் தொடருமேயானால், இக்கட்சிக்கு புதிய முகம் கொடுக்க விரும்பிய, முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் அத்தனை முயற்சிகளும் வீணாய் போவதுடன், அவரது நாளைய முதல்வர் கனவும், கலைந்து போய் விடும்.
பா.ம.க.,வின் பழைய வரலாற்று புத்தகத்தை புரட்டினால், வன்முறை இல்லாத பக்கமே இருக்க முடியாது. இடஒதுக்கீட்டுக்காக அக்கட்சி நடத்திய போராட்டங்களில் துவங்கிய போக்கு, கட்சியில் நீக்கமற நிறைந்திருந்தது. மரங்களை வெட்டி சாலையில் போடுவதும், பாறைகளை சாலையில் உருட்டி விட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும், இக்கட்சி கண்டுபிடித்த போராட்ட வழிமுறை. அதனால், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக, வழக்கை சந்தித்த, முதல் தமிழக கட்சி என்ற பெயரையும் பெற்றது. அதை மாற்றி, புதிய பரிமாணத்துடன், கட்சியை முன்னெடுத்துச் செல்ல, அன்புமணி முயன்றார். பா.ம.க., வலுப்பெற்ற கிராம கூட்டங்களில் பேசிய அன்புமணி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். அதன்மூலம், அடிமட்ட மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும்,அவர்கள் மூலம், பா.ம.க., மீதான பார்வையை மாற்றவும் திட்டமிட்டார்.
'பா.ம.க., வன்முறை கட்சியில்லை. நான் தர்மபுரி தொகுதியில், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அங்கு எந்த கலவரமும் நடக்காமல் அமைதியாக உள்ளது. நான் முதல்வரானால், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும்' என, பிரசாரக் கூட்டங்களில் பேசி வந்தார்.

முட்டுக்கட்டை


தேர்தல் களம் என்று வருகிறபோது

Advertisement

, வெற்றிடத்தில் இருந்து புறப்படும் கட்சிகள், வெற்றியை தொட நிறைய போராட வேண்டியிருக்கும். பா.ம.க.,வுக்கும் அப்படியொரு போராட்டம். அதில், வெற்றி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடுவது தானே மற்ற கட்சிகள் இயல்பு.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில், அன்புமணி போட்டியிடுகிறார். அவருக்கு நெருக்கடி கொடுப்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் போட்டி போடுகின்றனர்.
அது, பா.ம.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அதனால், மீண்டும் பழைய பாதைக்கு திரும்பி, வன்முறையை கையில் எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் முதல், பா.ம.க.,வினர் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற துவங்கி உள்ளனர்.
குறிப்பாக, பென்னாகரம் தொகுதி பிரச்னையை சமாளிக்க, அங்கிருக்கும் மற்ற கட்சியினரின் பார்வையை பிற பகுதிகளுக்கு திருப்ப, மற்ற தொகுதிகளில், வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமேஜை உடைக்க முயற்சிபா.ம.க.,வினர் மீண்டும் கையில் எடுத்துள்ள வன்முறை பாதை, அன்புமணியின் வெற்றியை கேள்விக்குறி ஆக்கி விடும். ஜாதிக்கட்சி என்ற இமேஜை உடைக்க, மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள அன்புமணி, பா.ம.க.,வினர் கையில் உள்ள வன்முறை ஆயுதத்தை உடனடியாக பறிக்க வேண்டும்; இல்லையெனில், 'மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி' என்ற அவரது பிரசார முழக்கம், 'மாற்றம்... முன்னேற்றம்... ஏமாற்றம்' என்ற நிலைக்கு கொண்டு போய் விடும்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari prasath - madurai,இந்தியா
03-மே-201622:44:36 IST Report Abuse

Hari prasathபா.ம.க. பற்றிய செய்திக்கு வந்த கருத்துகளிலேயே இவ்வளவு ஜாதி வாடை என்றால் ,ஆட்சிக்கு வந்தால்?

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
03-மே-201619:28:19 IST Report Abuse

D.RAMIAHஇன்று மிகவும் ஜாதி தொந்தரவு இல்லாத கட்சி கம்யூனிச்ட்டுக்கள் மட்டும் தான் - இதுதான் உண்மை

Rate this:
Balaji - Khaithan,குவைத்
03-மே-201617:18:10 IST Report Abuse

Balajiஎப்படியாவது நம் மீது இருக்கும் கறையை துடைத்து விடலாம் என்று எதிர்பார்க்கும் திரு.அன்புமணிக்கு இப்போது புரிந்திருக்கும் நாய் வாலை நிமுத்த முடியாது என்று..... பாமக என்றாலே மரம் வெட்டுவதும் பொது சொத்துக்களை அடித்து நொறுக்குவதும் தானே நினைவுக்கு வருகிறது......

Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X