வாழப்பாடி: ''ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது,'' என, வாழப்பாடியில் நடந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், வாழப்பாடியில், ஏற்காடு தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வனை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது;
பெண் போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. ஜெ., ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து விட்டது. முதல்வரை காணொலி காட்சியில் மட்டுமே காண முடிந்தது. 2011 தேர்தலுக்கு பின், ஜெயலலிதாமக்களை சந்திக்க வரவில்லை.ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில், தமிழகம், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. அந்த பின்னடைவை சீரமைக்கவே, கடந்த மாதம், 10ம் தேதி, தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல், கல்விக்கடன் ரத்து, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம், கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய் என்பனஉட்பட, 501 அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.தமிழ் பண்பாட்டை, கலாசாரத்தை
சீரழிக்கிற ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
*பாட்டு பாடி அசத்தல்
முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசும் போது, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே... என்ற பாடலையும், கெட்டிக்காரி... தக்குமிக்கு திக்குதாளம்.. என்ற பாடலையும், மாடி மேல மாடி கட்டி... கோடி கோடி சேர்த்து வைத்த கோமானே... என்ற மூன்று பாடல்களை பாடினார்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (78)
Reply
Reply
Reply