பதிவு செய்த நாள் :
'அதிகாரிகள் மாற்றத்தை நிறுத்துங்கள்':
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மனு

'அதிகாரிகள் இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அதிகாரிகளை மாற்றாதீங்க: அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியிடம் அளித்த புகார் மனு:
தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், உயர் அதிகாரிகள் இடமாற்றம்

செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தேர்தலுக்கு என தனி டி.ஜி.பி., நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகள் அனைவரும், அவரது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் அனைவரும், தி.மு.க., - காங்கிரஸ் கட்சியினர் கொடுத்தபுகாரில் மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த புகார் குறித்து, விசாரணை எதுவும் நடத்தவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் அளித்த, தவறான புகார் அடிப்படையில், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தேர்தல் பணிகள் பாதிக்கும்.அதேபோல் தேர்தல் பணிக்கு தொடர்பில்லாத, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனரும், தி.மு.க., - காங்கிரஸ் புகார் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளார்.'அ.தி.மு.க., தேர்தல் கமிஷனுடன் கூட்டணி அமைத்துள்ளது' என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும், புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது, அவர்கள் எப்போதும் பின்பற்றும் வழிமுறை. தவறான புகார்களை கூறி, அதிகாரிகளை மாற்றி, அ.தி.மு.க., மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த, தி.மு.க., - காங்கிரஸ் இந்த வழியை பின்பற்றுகின்றன. இதை அனுமதிக்கக் கூடாது. எனவே, மாற்றப்பட்ட அதிகாரிகளை, மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Chandramani - Virudunagar  ( Posted via: Dinamalar Android App )
03-மே-201619:27:19 IST Report Abuse

N.Chandramaniதிருமங்கலம் இடை தேர்தலில் அழகிரி திருமங்கலம் பகுதிக்கு வர கூடாது என்று டில்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு தந்தது நீங்கள் தானே

Rate this:
krishna - cbe,இந்தியா
03-மே-201613:19:06 IST Report Abuse

krishnaபயம் மண்ணை கவ்வி விடுவோம் என்று.

Rate this:
Gunasekar - hyderabad,இந்தியா
03-மே-201612:46:09 IST Report Abuse

Gunasekarஅம்மா அதிகாரிகளையும், அமைச்சரையும் மாற்றும் போது யாராவது கேள்வி எழுப்புநீர்களா? இப்ப மட்டும் கேட்கீரீர்கள் ... உங்களுக்கு இந்த தைரியம் வராது.... அம்மா உங்கள உட்டு கேட்க சொல்லியிருக்காங்க. தில்லு முள்ளுக்கெல்லாம் நீங்களும் , DMK யும் தான் பயப்படமாட்டீர்கள் . நீங்கள் இருவரும் இல்லாத தமிழ்நாடு தான் நேர்மை இருக்கும்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X