சென்னை:'நிலக்கரி இறக்குமதியில் நடந்த, 1,500 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தை, மின்வாரியம் ஏன் மறுக்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:நிலக்கரி இறக்குமதியில் மட்டும், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்துள்ளது என்றும், இந்தப் பணம், இந்தோனேஷியா வங்கிகளில் குவித்து சேமிக்கப்படுகிறது என்றும், ஒரு தகவலை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான, அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு, 200 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதில், 140 லட்சம் டன் நிலக்கரி, உள்நாட்டின் கோல்
இந்தியாவின் துணை நிறுவனங்கள் மூலம் பெறப் படுகிறது. மீதி,
60 லட்சம் டன் நிலக்கரி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துவாங்கப்படுகிறது.
அயல்நாடுகளில் நிலக்கரி விலை, 2009ம் ஆண்டில் டன் ஒன்று, 130 அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ஆனால், 2013ம் ஆண்டில் இருந்து நிலக்கரி விலை வீழ்ச்சி கண்டு, 30 டாலர் முதல் 40 டாலராகஉள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் சரக்கு கட்டணம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால், ஒரு டன் நிலக்கரியின் இறக்குமதி விலை, 50 டாலர்கள் தான். அதாவது, இந்திய மதிப்பில்,
3 ஆயிரத்து, 360 ரூபாய்.ஆனால், தமிழக மின்வாரியம், போலி ஆவணங்கள் மூலம், இந்த நிலக்கரியை, 87 டாலருக்கு வாங்குவதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது டன் ஒன்று, 3 ஆயிரத்து 360 ரூபாய் விலைக்கு வாங்கப்படும் நிலக்கரியை, 5 ஆயிரத்து 752 ரூபாய்க்கு வாங்குவதாக மோசடியான பொய் கணக்கு காட்டுகிறது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கப்பலில் வரும்போது, இன்வாய்ஸ் எல்லாம் திருத்தி மாற்றப்பட்டு, புது ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, 87 டாலராக அதாவது, 5 ஆயிரத்து 752 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு, பொய் கணக்கு பதிவு
செய்யப்படுகிறது. இந்த முறைகேடுகள் மூலம், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய்
கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.விலை உயர்த்தப்பட்டு, கூடுதலாக வரும் தொகை, அ.தி.மு.க., அமைச்சர்களுக்காக இந்தோனேஷியா வங்கிகளில் சேமிக்கப்பட்டு வருவதாக,
மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளதாக, 'எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி' கூறியுள்ளது.
தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும், 60 லட்சம் டன் நிலக்கரியில், கணிசமான அளவு அதானி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவலை, தமிழக மின்வாரியமோ, மின்துறை அமைச்சரோ, முதல்வரோ இதுவரை மறுக்கவில்லை.தேர்தலையொட்டி, பணம் கடத்தப்படுவது மட்டுமல்ல; அதிகாரிகள் மாறுதல்களும் இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு நடக்கின்றன.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (32)
Reply
Reply
Reply