பிரசாரத்தை ரத்து செய்து விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை ஓட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
பிரசாரத்தை ரத்து செய்து
உளுந்தூர்பேட்டை ஓட்டம்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, ஏப்., 11ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.அவர், தனது மூன்றாம் கட்ட பிரசாரத்தை, கன்னியாகுமரி மாவட்டத்தில், ஏப்., 29ம் தேதி துவங்கி, தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்தபடியே, திருச்சி வந்தார்.

 பிரசாரம் ரத்து செய்து விஜயகாந்த் ஓ்ட்டம்


நேற்று அவர் லால்குடி, மண்ணச்சநல்லுார், முசிறி, துறையூர் தனி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, மணச்சநல்லுாரிலும்; பெரம்பலுார் தனி, குன்னம், அரியலுார், ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர்களுக்காக, அரியலுாரிலும், பிரசாரம் செய்வதாக இருந்தார். இதற்காக, போலீஸ் அனுமதி பெற்று கூட்ட ஏற்பாடுகளை, தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.அதேபோல, மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளுக்கு திருவெறும்பூரிலும்; தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கு, தஞ்சாவூரிலும், விஜயகாந்த், இன்று பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, திருச்சியிலிருந்து பெரம்பலுார் வந்த விஜயகாந்த், அங்கு முகாமிட்டார். ஆனால், திடீரென பிரசாரத்தை ரத்து செய்து விட்டு, தான் போட்டியிடும் உளுந்துார்பேட்டைக்கு சென்று விட்டார். அங்கு நேற்று அவர் தீவிர பிரசாரம் செய்தார். உளுந்துார்பேட்டையில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திலும், விஜயகாந்த் பங்கேற்க

உள்ளார்.

* மக்கள் ஆதரவு இல்லைஉளுந்துார்பேட்டையில் எதிர்பார்த்தபடி, மக்களிடம் ஆதரவு இல்லை என்பதை, தொகுதியில் முகாமிட்டுள்ள மைத்துனர் சுதீஷ் மூலம், விஜயகாந்த் தெரிந்து கொண்டார். இதையடுத்து, அவசரமாக தொகுதிக்கு பறந்து சென்றுள்ளார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து, தனது வெற்றிக்காக கடுமையாக உழைக்கும்படிகேட்டுக்கொண்டார்.
உளுந்துார்பேட்டையில், 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை, முகாமிட்டு பிரசாரம் செய்ய விஜயகாந்த் திட்டமிட்டு இருந்தார். ஆனால், தொகுதி நிலவரம் சாதகமாக இல்லை என்றதும், இப்போதே களமிறங்கி விட்டார் என, அக்கட்சியினர் தெரிவித்தனர்.

* சுதீஷ் திணறல்விஜயகாந்த், கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில், முறையே விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், சட்டசபைக்கு சென்று தொகுதி பிரச்னைகள் குறித்து பேசவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அத்தொகுதி மக்கள் மத்தியில் ஆதங்கம் நிலவுகிறது.
இந்நிலையில், இத்தேர்தலில், உளுந்துார்பேட்டை தொகுதியில், விஜயகாந்த் போட்டியிடுகிறார். உளுந்துார்பேட்டை தொகுதி மக்கள், விஜயகாந்தின் கடந்த கால செயல்பாடுகளை புரிந்து கொண்டு உள்ளனர்.அதனால், தொகுதியில் விஜயகாந்த் ஆதரவு அலை அதிகரிக்கவில்லை. விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், கடந்த சில நாட்களாக, உளுந்துார்பேட்டை தொகுதியில் முகாமிட்டு, விஜயகாந்திற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்துவருகிறார்.

பிரசாரத்தின் போது, சுதீஷை சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்கள், விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அந்த இடத்தில் இருந்து சுதீஷ் நழுவி

Advertisement

விடுகிறார்.

பிரேமலதா
தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சிகளின்
வேட்பாளர்களுக்கு ஆதரவாக, விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சி வேட்பாளர்களை தவிர்த்துவிட்டு, தே.மு.தி.க., வேட்பாளர்களுக்காக மட்டும், பிரேமலதா பிரசாரம் செய்து வருகிறார்.
இதனால், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பிரேமலதா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, பிரேமலதா பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சிகளுக்கு, கூட்டணி கட்சியினர் வருவதில்லை. தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே கூடுகின்றனர்.பிரேமலதா பேச்சை கேட்பதற்கு, ஒவ்வொரு இடத்திலும், அதிகபட்சமாக 150 பேர் வந்தாலே அதிகமாக உள்ளது.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:விஜயகாந்த் தலைமையிலான கூட்டணிக்கு, பெரிய அளவில் எழுச்சி கிடைக்கும் என பிரேமலதா கணக்கு போட்டார். ஆனால், விஜயகாந்த் மற்றும் வைகோ, தங்களது சொதப்பல் பிரசாரங்களால், பிரேமலதாவின் கணக்கை தவிடுபொடி ஆக்கி விட்டனர். எனவே, அதிக நேரம் பிரசாரம் செய்து உடம்பை கெடுத்துக் கொள்ளாமல், குறைந்த நேரம் மட்டுமே பேசுவதற்கு அவர் முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. -- நமது நிருபர் --


Advertisement

வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
03-மே-201617:44:40 IST Report Abuse

Balajiதிரு.விஜயகாந்த் அவர்கள் தங்களின் பேச்சு திறமையை இதுவரை வளர்த்துக் கொள்ளாததும் அவருக்கு பெருத்த பின்னடைவு தான்..... தலைவர் என்ற போக்கு அவரிடம் சிறிதேனும் வளர்ந்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது..... இதற்கு அவரது மனைவியும் மைத்துனரும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.... அவரை ஒரு பொம்மை போன்றே வைத்து இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.....

Rate this:
Balaji - Khaithan,குவைத்
03-மே-201617:35:51 IST Report Abuse

Balajiஇவர் இப்போது தினமலரை விமர்சித்து பேசியதால் இவரின் மீதான தாக்குதல் அதிகமாக இருப்பது போன்று தெரிகிறது.... கூடுங்குலம் எதிர்ப்பாளர் தினமலரை எதிர்த்தார் என்பதை அவர் தினமலருக்கு எழுதிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு அவரை அதன் பிறகு எந்தவிதத்திலும் விமர்சிக்காமல் இருந்த தினமலரா என்ற சந்தேகம் லேசாக வருகிறது.......

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
03-மே-201617:10:06 IST Report Abuse

Appavi Tamilanகேப்டனுக்கு இந்த தேர்தல் முடிவு மூலம் உணர்த்தப்போகும் கசப்பான உண்மை இதுதான். பிரேமலதா மற்றும் சுதீஷ் இருவரின் சூழ்நிலை உணராத அதீத ஆசை மற்றும் கூட்டணியை பிரிக்க கோடிக்கணக்கில் பணம் வாங்கி கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டி இல்லை என்பது வரை நாடகத்தை ஊழல் ராணியின் விருப்பத்திற்கு ஏற்றபடி நடத்தும் சைகொவின் தந்திரம் இவற்றால் அதிகம் ஏமாந்தது தான்தான் என்பதை வி.காந்த் உணரும்போது தேர்தல் முடிந்திருக்கும். எப்படியும் ம.ந.கூ குறைந்த இடங்களில் கூட வெல்லப்போவதில்லை. இந்த விளங்காத கூட்டணியால் வெறுமனே வாக்குகளை பிரிப்பது மட்டுமே நடக்கும். அப்படி நடந்தால் மீண்டும் அடிமைகளின் அராஜக ஆட்சி தொடரும். அதை தற்போது நினைத்தாலும் வெறுப்பாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், அடிமைகளுக்கு எதிரான மக்களின் ஆத்திரமும் தமிழகத்தை கொள்ளைக்காரியின் பிடியில் இருந்து காப்பாற்றும் அதே வேளை, இந்த ஆறு கோமாளிகள் கூட்டத்திற்கு மக்கள் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்.

Rate this:
மேலும் 87 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X