அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,வில் தேர்தல்
பொறுப்பாளர்கள் நியமனம்

அ.தி.மு.க.,வில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, ஒவ்வொரு தொகுதிக்கும், ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

அ.தி.மு.க., சார்பில், ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் பணிகளை கவனிக்க, வேறு தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். அவர்கள், அதிருப்தியாளர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து, தேர்தல் பணியாற்றுவர். இது, வேட்பாளருக்கு உதவியாக இருக்கும்.

ஆனால், இந்த முறை சட்டசபை தேர்தலுக்கு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதனால், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆள் இல்லாமல் வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தடுமாறினர்.இது குறித்து, கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் யார் என்பது,

வேட்பாளருக்கும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளுக்கு, 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், எம்.பி.,க்களும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில்மாவட்ட செயலர் போட்டியிடும் தொகுதிகளுக்கு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வில்லை. அங்கு தேர்தல் பணிகளை, அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள், வேட்பாளருடன் இணைந்து, தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் நேற்று முதல் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் - பன்னீர்செல்வம், மதுராந்தகம் - எம்.பி., மரகதம் குமரவேல், செங்கல்பட்டு - எம்.பி., ராமச்சந்திரன், ஆலந்துார் - முன்னாள் அமைச்சர் சின்னையா, பல்லாவரம் - தன்சிங், திருப்போரூர் - எம்.எல்.ஏ., மனோகரன்; ஸ்ரீபெரும்புதுார் - எம்.எல்.ஏ., சோமசுந்தரம் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.இதேபோல், எல்லா தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பொறுப்பாளர் அறிவிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு, வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

'உள்ளடி' வேலைக்கு தொகுதி மாற்றம்: ஆலந்துார் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அங்கு,

Advertisement

அவருக்கு கூட இருந்து தேர்தல் பணிகளை செய்ய சிட்டிங் எம்.எல்.ஏ.,வான வெங்கட்ராமன் பணிக்கப்பட்டிருந்தார். அதேபோல, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு உதவியாக செயல்பட, முன்னாள் அமைச்சர் சின்னையா கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
தொகுதி கிடைக்காத விரக்தியில் இருக்கும் வெங்கட்ராமனும், சின்னையாவும் வேட்பாளர் களுக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என, கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆலந்துார் பொறுப்பாளராக சின்னையாவை நியமித்து உத்தரவிட்டுள்ளது கட்சித் தலைமை. இப்படி, கட்சிக்குள், 'உள்ளடி' வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள பலரும், சொந்த தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு, பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். -


-நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kaleel rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மே-201600:13:38 IST Report Abuse

kaleel rahmanஅதிமுகவிற்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் , பல்லாயிரகணக்கான குடும்பங்களை நாசப்படுத்திய மதுவிற்கு ஆதரவான ஓட்டுக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - மதுவிற்கு எதிரான மாணவர்கள் சங்கம் .

Rate this:
Mohan Abraham - Chennai,இந்தியா
04-மே-201617:44:51 IST Report Abuse

Mohan AbrahamVery bad administration by the ruling AIADMK.

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
04-மே-201614:11:33 IST Report Abuse

Ramaswamy Sundaramஇந்த வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும்....இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.....மே 19தெதி அம்மாவின் தொண்டர்கள் ஆனந்த கும்மாளத்துடன் பாடப்போகும் பாட்டு இது....எதிரி கட்சிபயல்கள் இடிசிக்குட்டு சாகட்டும்

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
05-மே-201600:51:40 IST Report Abuse

ramasamy naickenஅற்றார் அலி பசி தீர்த்த அன்னபூரணிக்கு நீங்கள்தான் மைசூரில் இருந்து தினமும் பார்பன அக்ரகாரத்திற்கு சாப்பாடு கொண்டு வர வேண்டும். ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X