உளுந்துார்பேட்டை தொகுதியின் அ.தி.மு.க.,- -- தி.மு.க., வேட்பாளர்கள் விஜயகாந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க., - -ம.ந.கூ., முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், தற்போதைய எம்.எல்.ஏ.,
குமரகுரு, தி.மு.க., சார்பில்
வசந்தவேல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.தொகுதியில் தனக்கு எதிர்பார்த்த
வரவேற்பு இல்லாததால்,விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வரும் 7ம் தேதி முதல், 14ம் தேதி வரை பிரசாரம் செய்ய விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.
ஆனால், தொகுதியில் இருந்து வரும் தகவல்கள் சாதகமாக இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம், தொகுதியில் தன் பிரசாரத்தை துவங்கி விட்டு, விஜயகாந்த் சென்றார்.தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் பாலு மட்டும் விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் செய்கிறார்.
ஆனால், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள் விஜயகாந்தை கண்டு கொள்வதில்லை; விமர்சிப்பது கிடையாது. விஜய காந்தை, அ.தி.மு.க.,- - தி.மு.க.,
வேட்பாளர்கள் போட்டியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இது, தே.மு.தி.க., வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
-- நமது சிறப்பு நிருபர் --
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (51)
Reply
Reply
Reply