புதுடில்லி: லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரயில்வே அமைச்சரும், இணை அமைச்சரும் சபையில் இல்லாதது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின்போது, ரயில்வே அமைச்சகம் தொடர்பான கேள்வி
எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்க, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இணையமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் சபையில்இல்லை.
இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ''இது முதல்முறையல்ல; பார்லிமென்ட் நடக்கும்போது, அமைச்சர்கள் சபையில் முழு நேரமும் இருக்க வேண்டும் என்பதை சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும்,'' என, லோக்சபா காங்கிரஸ்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
அதைத் தொடர்ந்து, அரசுக்கு
கண்டனம் தெரிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இனி இப்படி நடக்கக்
கூடாது,'' என, எச்சரிக்கை விடுத்தார்.அப்போது பேசிய, பார்லிமென்ட் விவகாரத் துறை
அமைச்சர் வெங்கையா நாயுடு, ''தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம்; இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்,'' என, உறுதியளித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply