கருணாநிதியின் மதுவிலக்கு முடிவுக்கு 'வாட்ஸ் ஆப்' : ஸ்டாலின் புது விளக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதியின் மதுவிலக்கு முடிவுக்கு
'வாட்ஸ் ஆப்' : ஸ்டாலின் புது விளக்கம்

ராஜபாளையம்,:“குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுப்பது 'வாட்ஸ்ஆப்' மூலம் பரவ, இது கலாசார கேடு என கருதி, ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்ககூடாது என கருணாநிதி முடிவு செய்தார்,” என தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் புது விளக்கம் அளித்துள்ளார் .

 கருணாநிதியின் மதுவிலக்கு முடிவுக்கு 'வாட்ஸ் ஆப்' : ஸ்டாலின் புது விளக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா, இதுவரை இந்த தொகுதிக்கு வந்து உள்ளாரா? இன்று சென்னை உட்பட பல இடங்களில் மதுவிலக்கு கோரி போராட்டம் நடந்து உள்ளது. இதில்

ஈடுபட்ட பெண்களை போலீஸ் அடித்து உதைத்து மண்டையை உடைத்து உள்ளது. இதுபோல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த போராடிய சசிபெருமாள் சாவுக்கு காரணம் இந்த ஆட்சி தான்.

ஜெ., படிப்படியாக மது விலக்குஎன்கிறார். குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுப்பது 'வாட்ஸ் ஆப்' ல் பரவியது. இது கலாசார கேடு என கருதி 'தான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது' என்றார் கருணாநிதி.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்துார்: தி.மு.க.,ஆட்சியில் கொடுத்த' டிவி'க்கள் உங்கள் வீட்டில் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா கொடுத்த மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் எல்லாம் காயலான் கடை குப்பையில் இருக்கிறது.

அதேபோல் ஜெ.,யின் ஆட்சியும் குப்பைக்கு போகணும்.தவவாழ்க்கை வாழ்வதாக ஜெயலலிதா சொல்கிறார்.
அப்படியெனில் கோடாநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, வேளச்சேரி ஜாஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை மக்களிடம் ஒப்படைக்க தயாரா? தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையால்

Advertisement

அ.தி.மு.க.,விற்கு ஜன்னி வந்து விட்டது,” என்றார்.
சிவகாசி: சீன பட்டாசு ஒழிக்கப்படும். நமக்கு நாமே வெற்றி பயணமாக இருந்தது. இதனால் மக்கள் மனதில் தி.மு.க., மாற்றத்தை உண்டாக்கியுள்ளது,என்றார்.
சாத்துார்: என் மீது அவதுாறு வழக்கு தான் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கு இல்லை. உங்கள் குறைகளை மக்கள் பிரதிநிதிக்கு போனில் தெரிவித்து உடனடியாக கேட்காவிட்டால், தி.மு.க., பார்த்து கொண்டிருக்காது அவர்கள் மீது நடவடிக்கை பாயும், என்றார்.

Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
06-மே-201620:27:09 IST Report Abuse

Krishnamurthy Venkatesan5 ஸ்டார், 3 ஸ்டார், 1 ஸ்டார் ஹோட்டல்களில் மது கிடைக்குமா கிடைக்காதா? பாண்டிச்சேரியில், பெங்களூரில் மது கிடைக்குமா கிடைக்காதா? ராணுவ காண்டீனில், முன்னால் ராணுவ வீரர்களிடம் மது கிடைக்குமா கிடைக்காதா? அதிகாரிகளின் (ரயில்வே(?), முப்படை, போலீஸ்) மெஸ்ஸில் மது கிடைக்குமா கிடைக்காதா? டாஸ்மாக்கை மூடினாலும் ஏழைகளின் வாயில் (வயிற்றில்) மண்ணை போட்டாலும் நாங்கள் குடிப்பதை யாராலும் தடுத்தவும் முடியாது நிறுத்தவும் முடியாது. தலை சுத்துதே. சட்டம் எல்லோருக்கும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் சமமா?

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
06-மே-201618:59:13 IST Report Abuse

R.SANKARA RAMANமது விலக்கு தமிழ்நாட்டில் வரவேண்டும் என்று எல்லா கட்சிகளும் கூறுகின்றன ஆனால் புதுவையில் இதைப் பற்றி யாரும் மூச்சு விடக் காணோம் அவர்கள் குடித்து சீரழிந்தால் பரவாயில்லையா

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
06-மே-201618:06:58 IST Report Abuse

mindum vasanthamஅது ஏனப்பா தேர்தல் முன்பு தான் இவர்களுக்கு மது பற்றி ஞாபகம் வருது

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X