பதிவு செய்த நாள் :
மத்திய அரசை கண்டித்து பேரணி:
சோனியா, மன்மோகன் கைது

புதுடில்லி: மத்திய அரசை கண்டித்து, டில்லியில் காங்கிரஸ் சார்பில், பார்லிமென்ட் முற்றுகை பேரணி, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து பேரணி: சோனியா, மன்மோகன் கைது

மத்திய அரசு, ஜனநாயக விரோத போக்கை கடைபிடிப்பதாகக் கூறி, டில்லியில், காங்கிரஸ் சார்பில் நேற்று, பார்லிமென்ட் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தரிலிருந்து காங்கிரஸ் தலைவர், சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர், பார்லிமென்ட் நோக்கி சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சோனியா, மன்மோகன், ராகுல் ஆகியோரை கைது செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத் உட்பட, பலர் கைதாயினர். பின்,

அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக, பேரணி துவங்கும் முன், ராகுல் பேசியதாவது: நாட்டில் இப்போது, இரண்டு பேரின் குரல்களுக்கு மட்டுமே மதிப்புள்ளது, ஒன்று பிரதமர் மோடி; மற்றொன்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பாகவத். இவர்களுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் மீது தேச விரோத வழக்கு, பதிவு செய்யப்படுகிறது.

நாட்டில் இப்போது, பல மாநிலங்கள், கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கின்றன. தினமும், 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், இது பற்றி பிரதமர் மோடி, வாயே திறப்பதில்லை. தான் ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு நல்ல நாட்கள் பிறக்கும் என மோடி கூறினார்.

ஆனால், 40 சதவீத மக்கள், வறட்சியில் சிக்கித் தவிப்பது தான் நல்ல நாட்களா? என, மோடியிடம் கேட்க வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, மோடி வாக்குறுதியளித்தார். ஆனால்,
கடந்த இரண்டாண்டு களில், 1.3 லட்சம் வேலை வாய்ப்புகள்மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.

சோனியா பேசியதாவது:
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை கூறி, என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறது. எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ள,

Advertisement

வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இது போன்ற பல சவால்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம்.

பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சிறந்த எதிர்க்கட்சியாக, காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டால், எந்த அரசும் தொடர்ந்து நீடிக்க முடியாது. அதற்கு, மக்களே சரியான பாடம் புகட்டுவர்.

அருணாச்சல் மற்றும் உத்தரகண்டில், மத்திய அரசு செயல்பட்ட விதம், ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டது. மத்திய அரசை, நாக்பூரிலிருந்து ஒரு அமைப்பு, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்குகிறது. மோடி அரசின் செயல்பாடுகளால், சிறுபான்மையினர், அச்சத்துடன் வாழ்கின்றனர். இவ்வாறு சோனியா பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-மே-201613:48:34 IST Report Abuse

Pasupathi Subbianகாங்கிரசின் ஊழல்களை இதுவரை மோதி அரசு உரிய கவனத்துடன் பரீசிக்கவில்லை. அது இந்த விசயத்தில் மெத்தன போக்கையே கையாளுகிறது. இந்த ஹெலிகாப்டர் ஊழலிலும், இத்தாலிய நீதிமன்றம் கண்டன கணைகளை தொடுத்தபின்னும், அந்த ஊழலின் முழு ஆதாரத்தையும் அந்த நாட்டுக்கு அனுப்பாமல், தேக்கி வைத்துள்ளது. அதே போல நிலக்கரி ஊழலிலும் சிபிஐ நடவடிக்கைகளை முடக்கிபோட்டு உள்ளது. இதுபோன்ற விபரங்களை பத்திரிக்கைகளும் , ஊடகங்களும் பெரிது படுத்திய பின்னரே நடவடிக்கை , விசாரணை என்று அனைத்தும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. இவற்றையும் மீறி காங்கிரஸ் எதோ எதிர்கட்சியினர் மீது அடக்குமுறை நடத்துவது போல ஆர்பாட்டம் செய்வதும் அதற்கு பதில் கூறாமல் மோடி இருப்பதும் என்ன காரணத்தினால் என்றே தெரியவில்லை. ஆக இந்த ஊழல் விசயத்தில் மோடி அரசு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

Rate this:
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
07-மே-201611:53:08 IST Report Abuse

குரங்கு குப்பன் கேடு கெட்ட காங்கிரஸ் கூட்டம் ஊழலையும் செய்து விட்டு வேஷமும் போடுகிறது

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-மே-201610:44:38 IST Report Abuse

Balajiநாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்து விட்டால் (இவர்களை ஒழிப்பதே நாட்டுக்கு நல்லது தானே) இவர்களுக்கு பொருக்காது.... உடனே மதத்தை கையில் எடுத்து அரசியல் செய்யவேண்டியது.... இப்போது விவசாயிகள் குறித்து கவலைப்படும் திரு.ராகுல் இவர்கள் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைக்கு என்ன காரணம் என்று பாராளுமன்றத்தில் சொன்னார்கள் என்பதை ஒருமுறை யோசித்து விட்டு பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்......

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X