பதிவு செய்த நாள் :
இந்திய வரைபடத்தில் பிழையா? :
ரூ.100 கோடி அபராதம்; 7 ஆண்டு சிறை

புதுடில்லி,: தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தினால், 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

 இந்திய வரைபடத்தில் பிழையா? : ரூ.100 கோடி அபராதம்; 7 ஆண்டு சிறை

பல்வேறு இணையதளங்கள், இணைய சேவைகளில், இந்திய வரைபடம் தவறாகக் காட்டப்படுகின்றன.

குறிப்பாக, அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தானின் ஒரு

பகுதியாகவும் காட்டப்படுகின்றன.

இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டுவதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, நிலபரப்பு தகவல் கட்டுப்பாட்டு மசோதா கொண்டு வரப்பட உள்ளது.தற்போது, பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் கருத்தை அறியும் வகையில், இதற்கான வரைவு மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதாவின்படி, இந்திய எல்லைகளை, பரப்பளவை, சர்வதேச எல்லைகளை தவறாகக் காட்டும் வரைபடத்தை பயன்படுத்தும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு, ஒரு கோடி முதல், அதிகபட்சம், 100 கோடி ரூபாய் வரை அபராதம்விதிக்கப்படும். மேலும், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படும்.

இதைத் தவிர, ஒவ்வொரு அமைப்பும், நிறுவனங்களும், தனிநபரும் வரைபடத்தை பயன்படுத்தும் முன், உள்துறை

Advertisement

அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள, புதிய குழுவின் ஒப்புதலை பெற வேண்டும். இதைத் தவிர, இது தொடர்பாக எந்த கோர்ட்டிலும் வழக்கு தொடர முடியாது; மேல்முறையீடு செய்ய முடியாது என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின், அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போது இந்த மசோதா தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pravin - London,யுனைடெட் கிங்டம்
07-மே-201616:44:26 IST Report Abuse

Pravinகூகிள் இன்னும் இப்படித்தான் காட்டுகிறது. 100 கோடி கூகிள்க்காகத்தான்

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-மே-201614:29:34 IST Report Abuse

Pasupathi Subbianஇதை விட இரண்டு வருடம் சிறை தண்டனை கொடுக்கலாம்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
07-மே-201613:05:47 IST Report Abuse

K.Sugavanamஉள்நாட்டு மக்களை பயமுறுத்தலாம்..வெளிநாடுகளை எப்படி கட்டுப் படுத்துவார்கள்..அரசே இந்திய வரை படத்தை தயாரித்து அதைமட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என சட்டம் போடலாம்..

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X