அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மலிந்து கிடந்த ஊழலுக்கு முடிவு கட்டினோம்!:
தமிழக பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

''இந்தியாவில், காங்., ஆட்சி காலத்தில் ஊழல் மலிந்து கிடந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலே நடக்கவில்லை,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்

 மலிந்து கிடந்த ஊழலுக்கு முடிவு கட்டினோம்!: தமிழக பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சென்னையில், நேற்று பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவில் நிலக்கரி ஊழல் பெருகி கிடந்தது. அதில் மட்டும், 1.76 லட்சம் கோடி அளவுக்கு, காங்., ஆட்சியில் ஊழல் புரிந்துள்ளனர். அதில் கிடைத்த பணம், குடோனில் இருந்து வெளியே போய்க் கொண்டிருந்தது.

பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், ஒரு ரூபாய் கூட நிலக்கரி துறையில் ஊழல் கிடையாது. நியாயமான முறையில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு, சரியான வகையில் வினியோகம் செய்யப்படுகிறது.ஊழலை ஒழித்து விட்டோம்; வேலைவாய்ப்பை பெருக்கி விட்டோம். நிலக்கரி மூலம் கிடைக்கும் வருமானத்தை, ஏழை மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தியுள்ளோம்.

யூரியாவுக்கு தீர்வு: 2ஜி, 3ஜி, எத்தனை ஜியில் ஊழல் புரிந்தார்கள் அவர்கள்; தற்போது அந்த நிலை மாறி விட்டது. 2ஜி, 3ஜி ஊழல் செய்ய தெரிந்தவர்கள் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் தான். பா.ஜ., ஆட்சியில், 2ஜி, 3ஜி சரியான முறையில் ஏலம் விடப்படுகிறது.

அதேபோல், பல மாநில முதல்வர்களும், 'எங்களுக்கு யூரியா கிடைக்கவில்லை; விவசாயிகள் கவலைப்படுகின்றனர்' என, கடிதம் எழுதி வந்தனர். பல இடங்களில் யூரியா தேக்கி வைக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்பட்டது. விவசாயிகள் கூடுதல் விலைக்கு வாங்கி அவற்றை பயன்படுத்தினர்.

விவசாயிகள் பெயரில் யூரியாவை கெமிக்கல் நிறுவன முதலாளிகள் வாங்கி, அவற்றை பல பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தினர்; வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர். இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து, யூரியா பிரச்னையை முற்றிலுமாக ஒழித்துள்ளேன். விவசாயிகள் அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்.

சமையல் காஸ் மானியத்தில், வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக வழங்கியதில், 21 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், மானிய தொகையை வங்கி கணக்கில்

செலுத்தும் முறையை கொண்டு வந்தோம். கூடுதல் இணைப்பு வைத்திருந்தவர்களில், ஒரு கோடி பேர் தானாக முன்வந்து திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

எனக்கு சொந்த ஊர் இத்தாலி கிடையாது; என் உறவினர்களும் இத்தாலியில் இல்லை; மக்களாகிய நீங்களும் இத்தாலியில் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அங்குள்ளவர்கள், 'இந்தியாவில் ஊழல் நடந்துள்ளது' என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். 'லுாசாகி' கிடந்த நாட்டை,'ஸ்குரூ' போட்டு,'டைட்' செய்துள்ளேன்.

கடனுதவி: மக்களுக்கு மாம்பழத்தை கொடுப்பதை காட்டிலும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு, மா கன்றை கொடுப்பதுதான் சிறந்தது. பா.ஜ., அரசு, 'மேக் இன் இந்தியா, ஸ்டேண்டர்ட் இந்தியா, ஸ்டார்ட்டட் இன் இந்தியா' என, பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம், 1.25 லட்சம் வங்கி கிளைகள் அமைக்கப்பட்டு, மகளிர், தலித்துகள் ஆகியோருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் விவசாயிகள் வங்கிக்கு செல்லாமல் இருந்த சூழ்நிலையை மாற்றும் வகையில், 'முத்ரா' வங்கி திட்டம் உருவாக்கப்பட்டது.

கடந்த, ஐந்து மாதங்களில், 3.50 கோடி பேருக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப் பட்டுள்ளது. விறகு எரித்து சமையல் செய்யும் ஏழை பெண்கள், 400 சிகரெட்டை புகைக்கும் சூழலுக்கு ஆளாகி இதய பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதை தடுக்கவே, ஐந்து கோடி பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வினியோகத்தை துவக்கி உள்ளோம்.

உலக பொருளாதார நெருக்கடியிலும், இந்தியா, மின்னும் நட்சத்திரமாக விளங்கி வருகிறது. இந்தியா, வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் பயனை அடுத்த தலைமுறை அடையும். இதற்கு முன் இருந்த காங்., அரசு, பல திட்டங்களை அறிவிக்கும். ஆனால், அது, டில்லியுடன் முடிவடைந்து விடும். அது, கடைகோடி மக்களை சென்று அடையாது.
அந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளோம். ஒவ்வொரு திட்டத்திற்கும் சீறிய முறையில் யோசித்து, சிறப்பாக கண்காணித்து அமல்படுத்தி வருகிறோம். இதனால், ஒவ்வொரு திட்டமும், கடைகோடி மக்களை சென்றடைந்து வருகிறது.

பெண் குழந்தைகள் கழிப்பறை இல்லாததால், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை தடுக்க, 1.25 லட்சம் கோடி ரூபாயில், கழிப்பறைகள் கட்டி வருகிறோம்.இந்தியாவில், 40 சதவீத ஏழைகள், வங்கி வாசலை மிதித்தது இல்லை.இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வீட்டில் உள்ளவருக்கும் வங்கி கணக்கு துவக்கஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு, 'ரூபே' கார்டு தரப்பட்டது. அந்த குடும்பத்தின் தலைவர் இறந்தால், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். இதன் பலனை ஏழைகள் மட்டுமே உணர முடியும்.

காங்., ஆட்சியில், பல தலைவர்கள் தோன்றினர். ஆனால், ஒருவரும் மக்கள் மன்றத்தில், கணக்குகளை சமர்ப்பித்ததில்லை. ஆனால், நான் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு சொல்லி வருகிறேன்.இலங்கை, பாக்.,கில் தமிழர்கள்

Advertisement

இலங்கை தமிழர்கள் படும் துயரத்தை பார்த்து, அந்நாட்டு அரசுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு, அங்கு விரைந்து சென்றோம்.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். அங்கு, தமிழர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. அவர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர திட்டமிட்டு, 30 ஆயிரம் வீடுகள் தரப்பட்டுள்ளன. துாக்கு கயிறு முனைக்கு சென்ற, ஐந்து தமிழக மீனவர்களை மீட்டு, தமிழகம் கொண்டு வந்தது மத்திய அரசு.இதுபோல், ஆப்கானிஸ்தானில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம். அவரது சகோதரிக்கு, நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'இரண்டு மணி நேரத்தில், உங்கள் சகோதரர், இந்தியாவில் கால் வைப்பார்' என்றேன். மக்களுக்காக, சட்டப்படி உயிரோட்டத்தோடு, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை, உதாரணத்தோடு சொல்லி இருக்கிறேன்.

உங்களுக்கு, வளர்ச்சி தரும் அரசு வேண்டுமா, வீழ்ச்சி தரும் அரசு வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.தமிழக மக்கள், நல்ல ஆட்சியை பார்த்ததில்லை. மாறி மாறி, மோசமான ஆட்சியை பார்த்து வருகின்றனர். நல்ல ஆட்சி எப்படி இருக்கும் என்பது, அவர்களுக்கு தெரியாது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான், நல்ல அரசுக்கும், மோசமான அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்வர்.

நம் பிரச்னைகளுக்கு ஒரே மருந்து, முன்னேற்றம். அது வந்தால், நம் பிரச்னைகள் தீரும். மத்திய அரசின் திட்டங்களை பற்றி, நான் ஒரு வாரம் விடாமல் பேச முடியும். ஆனால், நான் இங்கு வந்ததற்கு காரணமும், மத்திய அரசின் திட்டங்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் போக வேண்டும் என்பதே. அதனால், பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்யுங்கள்.
இது, தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு முக்தி தர வேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்காகவே, நான் இங்கு வந்து உள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் மோடி, தன் பேச்சை, 'இதனை இதனால் இவன்முடிக்கும்' என துவங்கும் திருக்குறளை கூறி முடித்தார்.

- நமது நிருபர் குழு -

Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
07-மே-201614:50:58 IST Report Abuse

venkateshமொடிஜி நீங்கள் ஊழலை ஒழிக்க தான், ஒரு ஊழலால் குற்றம் சாட பட்ட ஒருவரை சந்தித்து விருந்து உண்டீர்கள. சும்மா பீலா உடாதீங்க. அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே ஜாதி தங்களை காப்பாற்றிக்கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

Rate this:
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
07-மே-201614:24:03 IST Report Abuse

தி.இரா.இராதாகிருஷ்ணன் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டை கட்சிகள் தமிழனையும் மட்டையாக்கி வைத்திருக்கின்றன....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-மே-201612:13:54 IST Report Abuse

இந்தியன் kumarபாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்து இருந்தால் இன்னும் பலமாக இருக்கும் .எதிர்காலத்திலும் பாஜக இரு கழகத்திடமும் கூட்டணி வைக்காமல் இருப்பது நல்லது.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X