சென்னை,:''உங்களுக்காக உழைக்க, மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்,'' என, முதல்வர் ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா, பிரசார வேனில் இருந்தபடி பேசியதாவது:அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது, பல மணி நேரம் மின் தடை இருந்தது. இதனால், எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தீர்கள் என்பதை
மறக்கவே முடியாது. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.உங்கள் ஆதரவோடு,
அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மக்கள் நலனுக்காக பல்வேறு
திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
மீன்பிடி தடை கால நிவாரண திட்டம்,மீன்பிடி குறைந்த காலத்திற்கு நிவாரண திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கப் படுவதுடன், இலவச இணையதள இணைப்பும் வழங்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில், செறிவூட்டப்பட்ட ஆவின் பால், 1லிட்டர், 25 ரூபாய்க்கு விற்கப்படும். அம்மா பேங்க் கார்டு வழங்கப்படும்.
இதன் மூலம் வட்டி யில்லாமல், வாரம், 10 ரூபாய் செலுத்தும் வகையில், 1,000
ரூபாய் கடன் வழங்கப்படும். உங்களால் நான்; உங்களுக்காகவே நான். . என் மீது
உங்களுக்கு நம்பிக்கை; உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை. தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல, சந்தர்ப்ப வாதம் தோற்க, நயவஞ்சகம் அழிந்திட, நம்பிக்கை வென்றிட, இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது போல், வெற்றியை தந்து உங்களுக்காக உழைக்க எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (130)
Reply
Reply
Reply