மக்களை ஏமாற்றும் அ.தி.மு.க., சென்னையில் கருணாநிதி எச்சரிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்களை ஏமாற்றும் அ.தி.மு.க.,
சென்னையில் கருணாநிதி எச்சரிக்கை

சென்னை :''உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். தமிழகத்தில் புதுவேகம் பாய்ச்ச, உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

 மக்களை ஏமாற்றும் அ.தி.மு.க., சென்னையில் கருணாநிதி எச்சரிக்கை

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மூன்றாம் கட்ட பிரசாரத்தை, நேற்று மாலை, சென்னை யில் துவங்கினார். மாலை 5:00 மணிக்கு, கோபாலபுரத்தில் இருந்து புறப்பட்ட கருணநிதி, சேப்பாக்கம், ஐஸ்ஹவுஸ், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், அம்பத்துார், ஆவடி, பூவிருந்த வல்லி ஆகிய பகுதிகளில் பேசியதாவது:

தமிழக தேர்தல் களத்தில், கடந்த சில நாட்களாக, தி.மு.க., கூட்டணிக்கு அபார வெற்றி கிடைக்கும் என, கருத்துக் கணிப்புகள்

சொல்கின்றன. அரசியல் விமர்சகர்களும் அதையே சொல்கின்றனர்.இதை வைத்து, தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருந்து விடக் கூடாது. நீங்கள் இன்னும் வேகமாக தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.

இலவசங்களை அறிவித்து, மக்களை அ.தி.மு.க.,ஏமாற்ற பார்க்கிறது. இலவச அறிவிப்புகளிலும், பல குளறுபடிகள் உள்ளன. தி.மு.க., அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நாங்கள் உங்களை நம்பித்தான் இருக்கிறோம்.

வரும் தேர்தலில், அனைவரும் சிந்தித்து ஓட்டளியுங்கள். காங்., தலைவர் சோனியா, சென்னையில் பிரசாரம் செய்தபோது, வெள்ளம் வந்தபோது, மக்களை தவிக்க விட்ட அ.தி.மு.க., அரசை துாக்கி எறிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனவே, தமிழக மக்களைகாப்பாற்றவும், தமிழகத்தை காப்பாற்றவும், தமிழகத்தில் புதுவேகம் பாய்ச்சவும், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.போக்குவரத்து நெரிசல்ஐஸ்ஹவுசில் பிரசாரத்தை முடித்து, கருணாநிதியின் வேன் புறப்பட்டது. பின்னால், கான்வாய் செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் முற்றுகையிட்டது.


Advertisement

இதையடுத்து, நந்தனம் சந்திப்பு வரை, கருணாநிதி வாகனத்துடன், ஒரு சில வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடிந்தது.

அதேபோல, லயோலா கல்லுாரி முகப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்ற வாகனங்களுடன் சேர்ந்து, கருணாநிதியின் வாகனமும் ஊர்ந்தது.

ஆனால், அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒருவரைகூட பார்க்க முடிய வில்லை. கருணாநிதி யின் பாதுகாப்பிற்கு வந்த போலீசார், போக்குவரத்தை சீரமைத்த பின், கான்வாய் புறப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
08-மே-201600:18:09 IST Report Abuse

jaganமத்தியிலும் இல்ல மாநிலத்திலும் இல்ல....லஞ்ச வசூல் குறைந்ததால் குடும்பத்திற்குள் அடிதடி சண்டை......நாங்களும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் ?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-மே-201618:52:09 IST Report Abuse

Balajiஇருவரும் தானே மக்களை ஏமாற்ற புறப்பட்டு விட்டீர்கள்.... இதில் வேறு உங்களை மட்டும் தான் நம்பியுள்ளோம் என்று அடைமொழிவேறு.... எதற்காக எங்களை நம்புகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன?????

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
07-மே-201618:06:17 IST Report Abuse

Devanatha Jagannathanமக்களை ஏமாற்றுவது உங்களோட ஏகபோக உரிமையாச்சே?

Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X