அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என, அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிடும் சட்டசபை தொகுதிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதி கள், என மொத்தம், 94 தொகுதிகள், செலவின பதற்றமுள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.அந்த தொகுதிகளில், பண நடமாட்டம் அதிகம் இருக்கும். வாக்காளர்களுக்கு, அதிக அளவில் பணம் வழங்கப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இத்தொகுதிகளில் பண நடமாட்டத்தை கண்காணிக்க, தனி செலவினப் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிகளில், பறக்கும் படை எண்ணிக்கை, மூன்றில் இருந்து, ஆறாக உயர்த்தப்பட்டுள்ளது. பறக்கும் படையில், மத்திய பாதுகாப்பு போலீசாரை நியமிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -