ஓசூர்:''பலமாக இருந்த தமிழகம், தற்போது மிகவும் மோசமாக உள்ளது. இப்போது நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல், எந்த கட்சி, எந்த எம்.எல்.ஏ., பதவிக்கு வருவார் என்பதற்காக இல்லை; யார் தங்களை காப்பாற்றுவர் என்பதற்காகத் தான் நடக்கிறது,'' என, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: என் இனிய வாக்காளப் பெருமக்களே... எனக்கு தமிழ் பாஷை தெரியாது; ஆனால், பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழகத்தில் நடக்கும் இந்த தேர்தல் வித்தியாசமானது.
அம்மா மீது கோபம் வந்தால், அய்யாவுக்கும்; அய்யா மீது கோபம் வந்தால் அம்மாவுக்கும்; ஒரு முறை கிணற்றிலும், ஒரு முறை குளத்திலும் மக்கள் விழுந்து கொண்டிருக்கின்றனர்; மாற்று ஏதுமில்லை. தமிழகத்தில், மூன்றாம் சக்தியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளது.
யார் காப்பாற்றுவர்?:பலமிக்க தமிழகமாக இருந்தது, தற்போது மிகவும் மோசமாகவும், மக்கள் கீழே போகும் சூழலும் உள்ளது. இப்போது நடக்கும் தேர்தல், எந்த கட்சி, எந்த எம்.எல்.ஏ., பதவிக்கு வருவார் என்பதற்காக இல்லை; யார் தங்களை காப்பாற்றுவர் என்பதற்காகத் தான். தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் பெருகி விட்டது. அதை எதிர்கொள்ள முடியாமல், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
அப்பிரச்னையை,
பா.ஜ., அரசு ஆட்சிக்கு
வந்தால் தீர்த்து வைக்கும். மத்தியில், பா.ஜ.,
ஆட்சி அமைந்து, கடந்த, இரண்டு ஆண்டுகளில் எந்தவித ஊழலுக்கும் இடம்
கொடுக்காமல் சாதித்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால்,
டில்லியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும், இங்குள்ள
மக்களுக்கும் கிடைக்கச் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை பேச்சு: சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ.,கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:ஓசூர் பொதுக் கூட்டத்தில் இருந்து வருகிறேன். தமிழக மக்களை பார்த்தால், மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கு, இரு திராவிட ஆட்சிகளால், இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் எதிர்காலத்தை பற்றி, சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
பொதுவாக தேர்தல் என்றால், எந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுவது என்ற பிரச்னை எழும். ஆனால் இங்கு, ஆட்சியை நீக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, முப்படையினரையும் உடனடியாக அனுப்பி வைத்தோம்; நானும் நேரடியாக வந்தேன். சென்னை மக்களின் துயரைத் துடைக்க, மத்திய அரசு ஓடோடி வந்தது.
அரசு என்பது என்ன, அது எப்படி செயல்பட வேண்டும் என்பதை, கடந்த இரண்டு ஆண்டு கால, மத்திய பா.ஜ., ஆட்சியை பார்த்து புரிந்து இருக்கும். இலங்கை, பாக்.,கில் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் படும் துயரத்தை பார்த்து, அந்நாட்டு அரசுடன் நல்லுறவு
ஏற்படுத்திக் கொண்டு, அங்கு விரைந்து சென்றோம்.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற
முதல் இந்திய பிரதமர் நான் தான். அங்கு, தமிழர்கள்
படும் துயரம் சொல்லி மாளாது. அவர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர திட்டமிட்டு, 30 ஆயிரம் வீடுகள் தரப்பட்டுள்ளன. துாக்கு கயிறு முனைக்கு சென்ற, ஐந்து தமிழக மீனவர்களை மீட்டு, தமிழகம் கொண்டு வந்தது மத்திய அரசு.
இதுபோல், ஆப்கானிஸ்தானில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம். அவரது சகோதரிக்கு, நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'இரண்டு மணி நேரத்தில், உங்கள் சகோதரர், இந்தியாவில் கால் வைப்பார்' என்றேன்.
மக்களுக்காக, சட்டப்படி உயிரோட்டத்தோடு, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை, உதாரணத்தோடு சொல்லி இருக்கிறேன்.
உங்களுக்கு, வளர்ச்சி தரும் அரசு வேண்டுமா, வீழ்ச்சி தரும் அரசு வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தமிழக மக்கள், நல்ல ஆட்சியை பார்த்ததில்லை. மாறி மாறி, மோசமான ஆட்சியை பார்த்து வருகின்றனர். நல்ல ஆட்சி எப்படி இருக்கும் என்பது, அவர்களுக்கு தெரியாது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான், நல்ல அரசுக்கும், மோசமான அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்வர்.
நம் பிரச்னைகளுக்கு ஒரே மருந்து, முன்னேற்றம். அது வந்தால், நம் பிரச்னைகள் தீரும். மத்திய அரசின் திட்டங்களை பற்றி, நான் ஒரு வாரம் விடாமல் பேச முடியும்.
ஆனால், நான் இங்கு வந்ததற்கு காரணமும், மத்திய அரசின் திட்டங்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் போக வேண்டும் என்பதே.
அதனால், பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்யுங்கள். இது, தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு முக்தி தர வேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்காகவே, நான் இங்கு வந்து உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி, தன் பேச்சை, 'இதனை இதனால் இவன்முடிக்கும்' என துவங்கும் திருக்குறளை கூறி முடித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (132)
Reply
Reply
Reply